பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

227


இல்லறம் பற்றிக் கூறும் பகுதியில் பொதுவாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள். வர்த்தக சமுதாயம் (Business Community) என இன்று நாம் பொதுவில் சுட்டிக் கூறுவோரைப் பற்றிய கருத்துகளாகவே அமைகின்றன் இவை. விரிவான செய்திகள் சிலம்பிலேயே பின்னர் வருகின்றன.

பின்னர் இந்திர விழவூரெடுத்த காதையில்தான் காவிரிப்பூம்பட்டின நகரின் அமைப்பில் எங்கெங்கே, எந்த எந்தச் சமுதாயத்தினர் அல்லது தொழில்களைச் செய்வோர் வாழ்ந்தனர் என்பது அதிகமாக விவரிக்கப்படுகிறது.

யவனர்கள், புலம்பெயர் மாக்கள், அன்றைய அடிக்கடி பயணம் செய்து இடம் மாறுவோர், வண்ணமும், சுண்ணமும், பூவும், புகையும், என்றிவை விற்கும் வாசனை வணிகர்கள், பட்டு, கம்பளி, பருத்தியாடை நெசவாளிகள், துணிகளில் அச்சுக் கட்டுவோர், பொன்னாலும், மணிகளாலும் அணிகலன்கள் செய்வோர், கூலவாணிகம் (தானிய விற்பனை) செய்வோர், உணவுப் பொருளாகிய பிட்டு விற்போர், அப்பம் சுடுவோர், வெற்றை கட்டுவோர், பஞ்சவாசம் விற்போர், தக்கோலம், இலவங்கங்கள், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், ஆட்டிறைச்சி விற்போர், எண்ணெய் விற்போர், வெண்கலம் விற்போர், கன்னார், தச்சர், கொல்லர், ஓவியர், குயவர், பொம்மை செய்பவர், தட்டார், பொற்கொல்லர், பாணர்கள், தோல் வேலையாளராகிய சக்கிலியர், துணியிலும், மூங்கிலிலும், சடை நெட்டிகளிலும் பல வேலைகள் செய்வோரும், இசைப் பிரிவினரும், கைவேலை, நுண் தொழில்களில் ஈடுபடுவோரும் வாழ்கிற மருவூர்ப்பாக்கம் என்கிறார் சிலப்பதிகார ஆசிரியர். நகரின் தொழில் வல்லுநர் குடியிருப்புப் பகுதியே இது. செய்யும் தொழில் அடிப்படையிலான சமுதாய அமைப்பே இங்கு கூறப்பட்டுள்ளது. கனரகத்