பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

பழந்தமிழரால் நகரமைப்பு ஒரு கலையாகவே போற்றப்பட்டிருப்பது இப்பகுதிகளிலிருந்து அறியப்படுகிறது. அதற்கான சான்றுகள் இவற்றிலிருந்து கிடைக்கின்றன.

பழந்தமிழர் என்ற தொடர் சங்ககால முதல் இன்று வரை உள்ள மெர்ழியின மக்களைக் குறிக்கவும், கட்டடக் கலை என்பது தனியார், இறைவர், அரசர், பொது, பாதுகாப்புப் பிரிவுகளிலான கட்டடங்களைக் (Individual or domestic royal public defence) குறிக்கவும், நகரமைப்பு என்பது பெருநகரங்களின் அமைப்பு ஒழுங்கு அழகு, கட்டுக்கோப்பு (Town planning or Urban planning) ஆகியவற்றைக் குறிக்கவும் இவ்வாய்வில் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

ஆய்வுப் பகுப்பு

1. கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும், 2. கட்டடக் கலை மரபு, 3. கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும், 4. கட்டடக் கலைஞரும் கட்டடங்களும், 5. நகரமைப்பு, 6.பூம்புகார் நகர், 7. மதுரை நகர், 8. முப்பெரு நகர், 9. நகரமைப்பில் சமுதாயங்கள் என்ற தலைப்புகளில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. "Architecture was called mother of all arts and it is still true. It is the crystallised physical expression of culture projected into space and form. This art cannot develop and mature without the active interest of society"