பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



பாக்கம் என்ற பிரிவுகளுடன் ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்புப் போல அமைந்திருந்துள்ளது.

14. மதுரை நகரம் அகநகர், புறநகர் என்ற பிரிவுகளுடன், தாமரைப்பூப் போன்ற வடிவில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

15. தெருக்களின் கீழே யானைகள் நுழைந்து செல்லுமளவு பெரிய நீர் செல்லும் வழிகள் (Underground ways) அமைக்கப் பட்டிருந்துள்ளமை வியந்து பாராட்டுதற்குரியது.

16. நகரங்கள் அமைப்பில் பெரும்பகுதி மரக்கூட்டங்கள், சோலைகள், இளமரக்காக்கள், உய்யான வனங்கள் ஆகிய காற்றோட்டம், சுற்றுப்புறத் தூய்மை (Ecology) ஆகியவற்றுக்கு ஏற்ப ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் ஏரிகள், நீர்நிலைகள், நீரூற்று ஆகியன தக்கவாறு அமைக்கப் பட்டிருந்தமையும் தமிழரின் ஆரோக்கிய வாழ்வின் நாட்டத்தைக் காட்டுகின்றன.

17. நகரமைப்பில் நாளங்காடி (பகல் நேரக் கடை) அல்லங்காடி (இரவு நேரக் கடை) என வகுக்கப்பட்டு அவ்வவற்றிற்கேற்ற வடிவத்தில் வெவ்வேறு வகையான வீதிகள் ஒதுக்கப்பட்டிருந்தமை வீதியமைப்புக் கலையில் தமிழரின் தனித்திறனைக் காட்டுகிறது.

18. பூம்புகார் வர்த்தக நகரமாகவும், மதுரை புலவர்கள் நகரமாகவும், காஞ்சி கலைகளின் நகரமாகவும் கண்டோர் கருதத் தக்கவாறு முறையுற அமைந்திருந்தது.

19. நகரமைப்புக் கலை நூல்களின் கண், தாமரை போல், சாமரம் போல், இரத்தினக்கல்லின் ஒளிபோல், நந்தியா வர்த்தப் பூப்போல் சுவஸ்திகம் போல் ஊர்களை அமைத்தல் வேண்டும் என்று இலக்கணமுறை வகுத்திருந்