பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நிறைவுரை

மனித நாகரிகத்தில் கட்டடக் கலையும், நகரமைப்பும் முறையான பரிணாம வளர்ச்சிகளாம். இவற்றில் ஒரு சமுதாயம் திறமை பெற்று உயர்வது என்பது பிற நலன்களுக்கும் பிற மேம்பாடுகளுக்கும் சான்றிதழ் பெறுவது போலாகும்.

உலகின் பழம்பெரும் இனங்களுள் தமிழினம் முதன்மையானது. தமிழினத்தின் தொன்மைக்குச் சிறந்த சான்று சிந்துவெளி நாகரிகமாகும்.

வரலாற்றுப் பெருமை

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சிந்துவெளியில் பெரும் சிறப்புமிக்க நாகரிகத்தோடு வாழ்ந்த மக்கள் இன்றைய தமிழர்களின் மூதாதையர்களே என்பதை மேனாட்டறிஞர்களும் இந்திய அறிஞர்களும் சான்றுகள் தந்து நிறுவியுள்ளனர்.

சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நகர்ப் பகுதிகள், கட்டடப் பகுதிகள், வாய்க்கால், தொட்டி போன்றவை அங்கு வாழ்ந்த மக்களது பண்பட்ட வாழ்க்கைக்குச் சான்றுகளாக அமைபவை. அத்தகு மக்களின் வழிவந்த தமிழர்கள் கட்டடம் கட்டுவதிலும், நகரமைப்பதிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும் என்னும் அவாவே இவ்வாய்விற்குத் துண்டுதல்.

அந்த அவாவின் விளைவாகவே சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய