பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

237



நூல்களிலும் பிறவற்றிலும் கட்டடக் கலைக்கும், நகரமைப்புக்கும் எடுத்துக்காட்டாக அமையும் பலவற்றைத் தொகுக்க ஊக்கப்படுத்தியது.

மனை மரபுகள்

பல்வேறு பெயர்களில் தென்னாட்டில் நிலவும் மனையடி நூல்கள் ஆய்வுக்குப் பெரிதும் உதவியாய் அமைந்ததோடு, அவற்றிற்கு இணையான செய்திகள் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களில் பொதிந்திருப்பதை அறியவும் பயன்பட்டன. அக்கருத்துகள் பழைய இலக்கியங்களில் வேரூன்றி இருப்பது புரிந்தது.

அரண்மனை, கோயிற் கட்டடக்கலை மதில், கோட்டை முதலிய பாதுகாப்புக் கட்டடக் கலை, என்று, தமிழ் மூவேந்தர் நகரங்களில் இவை ஒரு சீராக வளர்ந்து, திறன் பெற்றிருப்பதை அடுத்தடுத்து முதல் மூன்று இயல்களில் காண முடிந்தது.

தற்காலப் பொறியியலின் புது விளைவுகள் என்று கருதப்படும் அணை கட்டுவரை, ஏரிகளை அமைப்பது, பூமிக்கடியில் பாதைகள், சாலைகளை அமைப்பது போன்றவற்றில் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் திறன் பெற்றிருந்தமையை அறிந்து வியப்படைய முடிகிறது.

தில்லை, மதுரை, திருவரங்கம், இராமேச்சுரம் கோயில்களின் வரைபட அமைப்புகள் ஒரு பெரிய நகரமைப்புக்கு ஈடாக உள்ளன. அவற்றின் சிற்ப-கட்டட -ஒவிய நயங்கள் உலகளாவிய பெருமைக்குரியவையாக உள்ளன.

வடிவ அழகுகள்

தாமரைப்பூ வடிவம், மயில் வடிவம், சுவத்திக வடிவங்களில் நகர்களை அமைப்பது என்பது இன்றைய பொறியியலிலும் நினைத்துப் பார்க்க அரிய செய்திகள்.