பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

239


திய கலப்பை, உழவுக் கருவிகள், சிறு கோயில்கள், திருக் குளங்கள், தேர் கட்டுதல், சிலை வார்ப்படம், சிலை செதுக்கல், கோபுரங்களின் பல வகை, விமானங்களின் பல வகை, கோயில்களின் தூண் வகைகள், பல்வேறு வகை மண்டபங்கள், கோயில்களில் பயன்படும் பாத்திரங்கள், வாகனங்கள், அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள், தோரணங்கள் பற்றி எல்லாம் ஆராய வேண்டும். ஒவ்வோர் ஆய்வும் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும்.

தமிழகப் பழங்கோட்டைகளை ஒப்பிட்டு ஆராய வேண்டும். ஊர்களோடும், நகர்களோடும் அவற்றருகே உள்ள மலை, பாயும் ஆறு, நிலப்பரப்பு என்பனவற்றை ஒப்பிட்டு ஆராயக்கூடும். எதிர்கால ஆய்வாளர்கள் இவ்வகையில் தொடர்ந்து முயல்வார்களாக.


♫♫