பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல் ஒன்று


கட்டடக் கலையின்
தோற்றமும் வளர்ச்சியும்

ஆதியில் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்த மனிதன், கலப்பையைக் கண்டறிந்தான். அதன் துணையால் நிலத்தை உழுது பண்படுத்தித் தானியங்களை விளைத்து, தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவுப் பொருளை உற்பத்தி செய்துகொள்ள அறிந்து கொண்டான். இதுவே மனிதன் நாடோடி வாழ்க்கையை விடுத்துக் குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்வதற்கு மூல காரணமாய் அமைந்தது; அவனது வாழக்கையில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. விலங்கு நிலையினின்றும் படிப்படியாக மாறி, நாகரிகமடைந்து தான் பெற்றுள்ள ஆறாவது அறிவு மலரப் பெற்று, மனிதன் மனிதனாக வாழத் தலைப்பட்டான். பின்னர்தான், தன் குடும்பத்தோடு பாதுகாப்பாக வாழ்வதற்குப் புகலிடம் அமைத்துக் கொள்ள முற்பட்டான். களிமண்ணால் சுவர் எழுப்பி மரக்கழிகளையும் கொம்புகளையும் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டிக் காய்ந்த தழைகளையும், சருகுகளையும்,