பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27

ஒரு வீடு ஏற்பட்ட இடத்தில் பல வீடுகள் ஏற்படத் தொடங்கின. நிலையான வாழ்க்கை ஏற்பட்டது. ஒரு மனிதன் அடையும் நன்மைத் தீமைகள் உடன் வசிக்கும் பிற வீடுகளைச் சேர்ந்த மற்றவர்களால் அறியப்பட்டன. ஒருவர் பெறும் இன்ப துன்பங்களில் பிறரும் பங்கு கொண்டனர். மக்கள் சேர்ந்து வாழ முற்பட்டனர். இவ்வாறு ஊர்கள் அமைந்தன.

புகலிடம் அமைத்துக்கொள்வதில், அனுபவத்தின் பயனாகப் பல முன்னேற்றங்களும் திருத்தங்களும் உண்டாயின. கண்டவாறு வீடு கட்டும் நிலையை விடுத்து மக்கள் சில வரன்முறைகளை மேற்கொண்டனர். அவற்றில் சில பின்வருவன :

1. வீடு கட்ட நிலம் தேர்ந்தெடுத்தல். 2. வீடு கட்டக் காலநேரம் பார்த்தல், 3. நிலைக்கால், வாசற் கால் வைக்க நல்ல வேளை காணல், 4. குடிபுகும் நேரம் தேர்ந்தெடுத்தல், 3. மனைகோடலின்போது நிமித்தம் சகுணம் பார்த்தல்.

அச்செய்திகளே நூல்களாக உருப்பெற்றன. மக்கள் தமக்கு மேற்பட்ட அற்புத ஆற்றல்படைத்த சக்தியொன்று உண்டெனக் கண்டனர். அதனைப் பல்வேறு பெயரிட்டு அழைத்தனர். துயரமும் கையறவும் வருங்காலை வேண்டிவும், முறையிடவும் கோயில்களைக் கட்டிக்கொண்டனர். தங்கள் வாழிடங்களை விடச் சிறப்பாகவும் மதிப்புக்குரிய முறையிலும் வழிபடும் இடங்களைக் கட்டினார்கள்.

மயமதம், சிற்பநூல், மனையடி சாத்திரம் இவை அனைத்தும் இவ்வாறே தோன்றியிருக்கக் கூடும்.

வழிபடுபவர்களில் முன்னவராகிய கடவுளுக்கும், அதற்கடுத்த நிலைக்கு வரும் அரசருக்கும் சிறப்பான இடங்களில் சிறப்பான முறையில் வாழிடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முறையே கோயில்