பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

அரண்மனைகள்

சங்க காலத்து அரசர் அரண்மனைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லும் எவையும் இன்று முழுமையாகக் கிடைக்காவிடினும், பூம்புகார், மதுரை ஆகிய நகரங்களில் இருந்த, அரசர் இருக்கைகளைப் பற்றிய வருணனைகள் நமக்குத் தெரிவிக்கும் கருத்துகளிலிருந்து மாபெரும் அரச மாளிகைகளைத் தமிழர்கள் சிறப்புறக் கட்டியிருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக விளங்குகிறது. இன்றைய திருமலை நாயக்கர் மகால், சரசுவதி மகால் (தஞ்சை), செஞ்சிக்கோட்டை ஆகிய அரசிருக்கைக் கட்டடங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. நெடுநல்வாடையில் அரசர் அரண்மனை அமைத்த முறை பற்றிய விவரங்கள் பல குறிப்பிடப்படுகின்றன.

கோட்டைகள்

கிராமங்களைச் சுற்றியும், நகரங்களைச் சுற்றியும் பெரிய மதிற்சுவர்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்த நம்முடைய முன்னோர் பாதுகாப்பிற்காகப் பலவகை அரண்களையும் அமைத்திருக்கின்றனர்.

துர்க்கங்கள்

அவை கோட்டைகள் எனப்பட்டன. கோட்டைகள் ‘துர்க்கம்’13 என்றும் அழைக்கப்பட்டன.

மலைக்கோட்டை-கிரி துர்க்கம்

(உ-ம்) சங்ககிரி துர்க்கம்-சேலத்தருகே ஓரூர் மலையை அரணாகக் கொண்ட கோட்டை கிரி துர்க்கம் என அழைக்கப்பட்டது.

வனக் கோட்டை-வன துர்க்கம்

நதியினாலும் கடலினாலும் சூழ்ந்த கோட்டை ஜல துர்க்கம் என அழைக்கப்பட்டது. சேற்றினாலும் மண்ணா