பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

35

பகுதியும் கண்டுபிடித்து வெளிப்படுத்தப் பெற்றால் பல உண்மைகள் தெரியவரும்.

எனவே பொதுமக்கள் கட்டடக் கலை எவ்வாறு இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் மட்டுமே. ஒரளவு கிடைக்கிறது.15

நீர்பாசனக் கட்டடக் கலை

நீர்ப்பாசனத்துக்கான அணைக்கட்டுக்களைத் தமிழர்கள் கட்டிய முறைக்கும் நேரிடைச் சான்றுகள் கிடைக்கின்றன.

நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே16

என்று புறநானூற்றில் குடபுலவியனார் என்ற புலவர் தண்ணீரைத் தேக்கி வைத்து அணை கட்டுவதுபற்றிக் குறிப்பிடுகிறார். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய பாட்டு இது.

பண்டை மன்னர்கள் தமிழகம் முழுவதும் அமைத்த ஏரிகள், அவற்றின் அடிப்படையில் அமைந்த பாசன அமைப்புக்கள் யாவும் இன்றும் நாம் எண்ணி வியக்கத்தக்கன. இவை அனைத்திற்கும் சிகரம் போன்று அமைந்தது திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள கல்லணை ஆகும்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கரிகாலனால் கட்டப்பட்டு, இன்றும் பயன்பட்டு வரும் ஓர் அரிய கட்டமைப்பு (Construction) இக்கல்லணை. இவ்வணை மணல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டடம். நீர்த்தேக்கங்கள் அமைப்