பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

கட்டடத்திற்கு மனையைத் தேர்வது தொடங்கி மரத்தைத் தேர்வது, கிணறு வெட்டுவது வரை எல்லாவற்றுக்கும் சிற்ப நூல் மரபுகள்24 உள்ளன. கிணறு வெட்டுவதற்கே ஒரு நூல் உள்ளது. தமிழில் கூவ நூல் என்றும் வடமொழியில் 'கூப சாத்திரம்' என்றும் கூறப்படுவது அந்நூல். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் போலத் தோன்றினாலும் கட்டடக் கலை மரபினை மனை நூலில் இருந்து அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

கட்டடக் கலை தொடர்பாகப் பரங்கிப்பேட்டை எஸ்.ஏ. குமாரசாமி ஆச்சாரியார் பதிப்பித்த 'சில்பரத்னா கரம்' தொகுத்துக் கூறும் சிற்ப சாத்திர நூல்கள் வருமாறு:25

1. விசுவகன்மீயம், 2. விசுவம், 3. விசுவசாரம், 4. பிரபோதம், 5. விருத்தம், 6. மயமதம், 1. துவஷ்ட தந்திரம், 8. மனுசாரம், 9. நளம், 10. மானவீதி, 11. மானகல்பம், 12. ஞானசாரம், 18. பெருஸ்ருஷ்டம், 14. சுருஷ்டம், 15. மானபோதம், 16. விசுவபோதாயனம், 17. அதிசாரம், 18. விசாலட்சம் 19. விசுவ காசியபம், 20. வாஸ்துபோதம், 21. மகாதந்திரம், 22. வாஸ்து வித்யாபதி, 23. பராசரேயகம், 24. காலயூபம், 20. சைத்யம், 26. சித்ரம், 27 ஆவர்யம், 28. சதாட்சர சம்ஹிதா, 29. பானுமதம், 30. இந்திர மதம், 31 லோகஞானம், 32. செளரம்.

இதுவரை பதிப்பிக்கப்படாத மனுசாரம் என்னும் கையெழுத்துப் பிரதியில் பின்வரும் 28 நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.

1. ஈசாநம், 2. விசுவகன்மீயம், 8. விருத்தம், 4. மயமதம், 5. பார்க்கவம், 6. வாஸ்து வித்யா, 7. பராசரீயம், 8. சித்ரகாசியபம், 9. மார்க்கண்டம், 10. மானசாரம், 11. பிரயோக மஞ்சரி, 12. கோபாலம், 13. பெருஹிதம், 14. நாரதீயம், 15. இந்திரமதம்,