பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

1. மதச் சார்பற்ற மக்கள் கட்டடக் கலை, 2. சமய அல்லது கோயில் கட்டடக் கலை, 3. இராணுவக் கட்டடக் கலை, 4. சிற்பமும் ஓவியமும்34

பழஞ்சுவடிகளில் இருந்து திரட்டப்பட்ட 1,400 பாடல்களைக் கொண்ட சிற்ப சாஸ்திரம் மயமதத்தை அடிப்படையாகக் கொண்டு மணிப்பிரவாளத் தமிழில் வந்தது. அதுவே பின்னாளில் பல்வேறு பெயர்களோடு தமிழில் சிற்ப சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், மனைநூல் என்றெல்லாம் வழங்கலாயிற்று.

பெரும்பாலும் வீடு கட்டுதலைப் பற்றிய விவரங்களைக் கூறுவது.35 இந்த வழக்கங்கள் திராவிடப் பகுதி முழுவதும் (தமிழகம், கன்னடம், கேரளம், ஆந்திரம்) நடைமுறையில் உள்ளன.36 தமிழ் மனையடி சாத்திரத்தில் உள்ள தமிழ்ச் சொற்றொடர்களே வடமொழியிலும் பயிலுவதாகக் கணபதி ஸ்தபதி கூறுகிறார். 37

பலகை (பலகா) உளி (உளிகா) குமுதம் (குமுதகா) கம்பு (கம்பா) யாளி (யாள) குடம் (கட) கலயம் (கலச) தாழி (தாடி) அம்பலம் (அம்பல) பொதிகை (பொதிகா) தரங்கு (தரங்கா) பத்தி (பக்தி) பட்டிகை (பட்டிகா)

சிற்பிகளிடையேயும் கட்டடக் கலைஞர்களிடையேயும் பயிலும் பல சொற்கள் தமிழகராதிகளில் கூடக் காணப் படாமல் வாய்மொழியாகவே வழங்குவதாகவும் கணபதி ஸ்தபதி கூறுகிறார்.38

அலுங்கு உள்நாட்டியம் கோணாவிட்டம்

படங்கு உட்கூடு கட்டாயம்

அணிவெட்டிக்கால் சிலம்புக்குமுதகம் நிலைக்கால்

அடங்கல் பட்டைக்குமுதகம் பிள்ளைக்கால்

ஆளாங்கு நிலங்காணி பலமுனை

அலர்படி மானாங்காணி பத்திரிப்பு

அலையம் கொடிப்பெண் மதலை