பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

41


நாணுதல் கொடிவளை புறநாட்டு

நேரிசை கால்புறவாய் அகநாட்டு

மகர இசை கொடுங்கை விரல்

மாற்றானிசை சுரிப்பு முழக்கோல்

இடைக்கட்டு குறிமானம் மேழி உத்திரம்

மேழிப் போதிகை

இந்தத் தொடர்கள் (Technical terms) இன்றிச் சிற்ப உலகில் பழக இயலாது என்கிறார் கணபதி ஸ்தபதி. 39

பல ஏடுகளில் இருந்து திரட்டிய 1,400 தமிழ்ப் பாடல்களில் சில குறைந்தும் கூடியும் சிற்ப நூல் 40 என்றும், சிற்ப சாத்திரம் என்றும் நாட்டு வழக்கில் மனையடி சாஸ்திரம் என்றும் கிராமப்புறங்களில் வாய்மொழிப் பாடலாகவும் (Oral tradition) கூட வழங்குகின்றன.

ஏழைகள் முதல் பெருஞ்செல்வர் வரை (அரசர்கள் மாளிகை அமைக்கவும் சேர்த்து) வரையறை கூறும் அந்த நூலையும் அதன் விவரங்களையும் அடுத்த இயலில் காணலாம்.

பின்வரும் இயல்களில் கூற வேண்டிய கருத்துக்களுக்கும் ஆய்வு முடிவில் நிறுவப்பட வேண்டிய உண்மைகளுக்கும் இந்த மனைநூல் விவரங்கள் அடிப்படையாக அமையக் கூடும்.

குறிப்புகள்

1. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 4.

2. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 1.