பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் இரண்டு



கட்டடக் கலை மரபு

கட்டடக் கலை அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. 'சிற்பத் தொழில்' என்பதனைக் கலைஞானம் அறுபத்துநான்கின் ஒன்று1 எனக் குறிப்பிட்டு 'இல்லமெடுத்தல், கோயில் முதலியனக் கட்டுஞ் சாத்திரம்’ என மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கவும் செய்கிறது. செதுக்குவேலை, கல்வேலை,கற்சிற்ப வேலை என விரிவும் கூறப்படுகிறது. இத்தொழில் செய்வோரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று ‘கண்ணுள் வினைஞர் கண்ணாளர்’ என்பது. இச்சொற்றொடரே ஓவியர், சிற்பியரைக் குறிக்கவும் பயன்படுத்தப்பெற்றது. வடமொழிப் பெயரில் இது 'வாஸ்து வித்யா' எனப்படுகிறது. சிற்பத் தொழிற்கு உறுப்பு எனக் கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு ஆகியவை கூறப்பட் டுள்ளன.

இக்கலை பற்றிக் கூறும் முன்னூல்களாக விச்சுவ தருமம், விச்சுவேசம், விச்சுவசாரம், விருத்தம், தாவட்டம்,