பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

47

தமிழ்நாட்டிலிருந்து தேக்கு மரம் பல நாடுகளுக்குச் சென்றதற்கு அடிப்படைக்காரணம் தமிழர் வீடுகட்டுவதில் சிறந்த மரத்தைத் தேர்ந்தெடுத்ததுதான் என்பது தெளிவாகிறது. நல்ல மரங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை பற்றித் தமிழர், தெளிவாக அநுபவ அறிவின் வாயிலாக உணர்ந்திருந்தனர் என்பதை நம் மனைநூல் சாத்திரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.6

தமிழ் மனைநூலின் ஆசிரியர் யாரென அறிய இயலவில்லை எனினும் இவ்வழி நூலிலிருந்து நாமறியும் செய்திகள் பயனுள்ளவையாய் அமைகின்றன.ஆய்வுக்குப் போதிய உதவியாகவும் அமைகின்றன.

நிமித்தங்கள்

கட்டடம் கட்டுவோன் மனைகோல வேண்டும் என்று அதற்குரிய சிற்பியை (கொத்தனாரை) அழைத்துக் கொண்டு புறப்படும்போது எதிர்ப்படும் மனிதர்கள், பொருள்கள் ஆகியவற்றையே மனைநூல் நிமித்தம் என்று கூறுகிறது. பாமரர் வழக்கில் இதுவே சகுனம் என்றும் கூறப்படும்.

இனி எந்தெந்த நிமித்தங்கள் நல்லவை, எந்தெந்த நிமித்தங்கள் தீயவை என மனை நூலின்படியே காணலாம்.

நன்னிமித்தங்கள்

1. பேரழகு வாய்ந்த பெண்கள் எதிர்ப்படுதல், 2. நிறைகுடம், 3. துணி வெளுக்கும் வண்ணான், 4. தயிர்க்குடம், 5. பால்குடம், 6. சோறு, 7. மதுக் குடம், 8. பருவ மகளிர், 9. சாரைப்பாம்பு, 10. தேவதாசி, 11. கரும்புக்கட்டு, 12. இரட்டை அந்தணர்.7

கீழ்வரும் விலங்குகளும் பறவைகளும் மனைகோலைப் புறப்படுகையில் இவ்வாறு புறப்பட்டுச் செல்கிறவருக்கு