பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தப் புத்தகம்

நாவலாசிரியர் அமரர் நா. பார்த்தசாரதி அவர்கள் பல கோணங்களில் பரிணமித்தவர். மிகச் சிறந்த நாவலாசிரியராகவும், சிறுகதை ஆசிரியராகவும் திகழ்ந்து, பற்பல படைப்புக்களைத் தந்த தீபம் நா. பா. வித்வானாக “சொல்லின் செல்வம்” தமிழாசிரியராக "தமிழ் இலக்கியக் கதைகள்” கவிஞராக “பூமியின் புன்னகை” பயண நூலாசிரியராக “புது உலகம் கண்டேன்” நாடகாசிரியராக “புத்த ஞாயிறு” என்று பல முகங்கள் காட்டியவர்.

இப்படிப் பல்துறை விஷயங்களைப் பல வடிவங்களில் தந்தவர், ஆய்விலும் ஈடுபட்டுத் தம் ஆய்வுப் பணியின் பலன் கிட்டு முன்பே இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

அவரது இறுதி முயற்சியின் வெளிப்பாடாக இந்நூல் வெளிவருகிறது.

விடாமுயற்சியின் முழு உருவமாகச் செயல்பட்ட நா.பா.வின் நினைவாக, அவரது இந்நூலைக் கண்ணீருடன் காணிக்கையாக்குகிறேன் நா.பா.வின் நினைவுகளுக்கு.

அகிலன் கண்ணன்
தமிழ்ப் புத்தகாலயம்