பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


நீருற்றி மலரிட்டுப் பார்ப்பது வழக்கமாகும். இது தவிர மற்றொரு வழக்கமும் இருந்தது.34

நீரூற்றி மறுநாள் காணும் நிலை

வீடு கட்டுகிற மனையில் கிழக்கு அல்லது வடக்குப் பக்கத்தில் நாற்சதுரமாகத் தோண்டி அவ்வாறு அகழ்ந்த குழியில் மங்கல மங்கையர் மூவர் குடங்களில் நீர் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். ஊற்றியபின் அம்மூவரும் ஊற்றிய நீரைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். பள்ளத்தில் அவர்கள் ஊற்றிய நீர் வலப்பக்கமாக ஒடிப் பாய்ந்தால் வெற்றி, செல்வம், செல்வாக்கு அனைத்தும் நாடி வரும். இடப்பக்கமாக ஓடினாலும், நுரையும், குமிழியும் ஆக நீர் உள்ளிறங்கினாலும் பல தீமைகள் வரும். 35

இனி இதனை இவ்வாறன்றி வேறுவிதமாகக் காணலும் உண்டு. அகழப்பட்ட பள்ளம் நிறையுமாறு முந்திய மாலையில் நீரூற்றி மறுநாள் கதிரவன் உதிக்கும். காலத்தே வந்து பார்க்கவேண்டும்.

அவ்வாறு காணுங்கால் மூன்றுபிடி (விரற்கடையளவு , நீரேனும் எஞ்சித் தேங்கி நிற்குமாயின் அது மிக நல்ல மனையாகும். நீர் இன்றிச் சேறாக ஈரப்பதத்தோடு இருப்பினும் நன்றே.

நீர் வறண்டு வெடித்திருந்தால் தாழ்வு நிலை வந்தெய்தும்.

ஈரப்பசையின்றிப் பாளம் பாளமாகப் பூமி பிளந்திருந்தால் நோயும், சிறைத்தண்டனையும் எய்தும்.

மண் எடுத்து கண்டும் அடைத்தல்

மனை கோலும் இடம் நல்லதா கெட்டதா என அறிய - மற்றொரு முறையும் வழக்கில் இருந்தது.36