பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கட்டடத் தொழிலும் கலையும்


தோற்றுவாய்

"கட்டடக் கலை கலைகளுக்கு எல்லாம் தாய்போன்றது என்பது இன்றும் உண்மையாகவே விளங்குகிறது. இது இடத்தையும் வடிவையும் இணைத்துப் பண்பாட்டின் தெளிவான புற வெளியீடாக அமைகிறது. இக்கலை சமூகத்தின் ஈடுபாட்டோடு கூடிய அக்கறையின்றி வளரவோ உயர்வு பெறவோ இயலாது என்று அறிஞர் கண்விண்டே கூறும் கூற்றை அமெரிக்க கட்டடக் கலை நிபுணர்களான ஜான் புச்சர்ட்டும் ஆல்பர்ட் புஷ்பிரவுனும் கூட உறுதிப்படுத்துகிறார்கள்.1

"கட்டடக் கலை ஒரு சமூகக் கலையாகும். எந்தக் கலையாயினும் சமூக நோக்கம் கொண்டுதான் இருக்க வேண்டும் என வாதிடப்பட்டாலும் கட்டடக் கலையைப் பொறுத்து அது தெளிவாகவே உள்ளது. கட்டடக் கலை, அக்கலைஞனுக்கு, வரையறைகளைக் கொடுக்கிறது. அத்தகைய வரையறைகளைச் சிற்பியோ ஓவியனோ கூடப் பெறுவதில்லை."2

புற அமைப்பு (Exterior) அக அமைப்பு (Interior) என கட்டடக் கலைக்கு இரு பிரிவுகள் உள்ளன. எல்லா கட்டடங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு பிரிவி

ப-1