பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61

(2) மூன்று மூலைகள் சரிவரப் பொருந்தி முக்கோணமாய் நான்காம் மூலையே இல்லாது பாம்பின் வால்போல அமைந்த இடத்திலும் வீடு கட்டலாகாது. பழைய மனையைச் சிதைத்த இடத்தில் கட்டுதலும் புதிய மனையில் பழைய வீட்டு உறுப்புக்களைப் பயன்படுத்தலும் ஆகா என்கிறது மனைநூல். 42

(3) வளைகளும் பொந்துகளும் உள்ள மனையும் கட்டடத்திற்கு ஆகாது.

(4) சூரிய சந்திரர் உதிக்கும்போது பார்வையில் படாத இடங்களில் வீடமைக்கலாகாது. அதாவது பார்வையில் படுமாறு அமைப்பது சிறப்பு ஆகும்.

ஏற்ற மாதங்கள் - ஏலாத மாதங்கள்

(கிரகாரம்பம் அல்லது பூமி பூஜை) மனை செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இவை, ஏலாத மாதங்கள் இவை என்றும் மனை நூலில் கூறப்பட்டுள்ளன.

புதிதாக வீடு கட்டப் புகுந்து மனை கோல முற்படுகிறவர்களுக்கு உத்தம்மான பயன்கள் விளையும் மாதங் களாவன. பின்வரும் எட்டு மாதங்கள். 43

1, சித்திரை, 2. வைகாசி, 3. ஆடி, 4. ஆவணி, 5. ஐப்பசி, 6. கார்த்திகை, 7. தை, 8. மாசி.

மேற்படி மாதங்களில் மனைகோலுவோருக்கு மிகவும் (அநுகூலங்கள்) நற்பலன்கள் விளையும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெட்டு மாதங்களிலும் மிகமிகச் சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை ஆகிய இரு மாதங்கள் கருதப்படுகின்றன. சித்திரை மாதம் சிறந்தது என்ற கருத்து நெடுநல் வாடையிலும் வருகிறது.44

மனை கோலும் முயற்சிக்கு ஆகாத மாதங்களாவன, பின்வரும் நான்கு மாதங்கள்.