பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

63

கட்டப் போகிறாரோ அவரே. தம் காலடியால் அளந்து பார்த்துக் கொள்கிற முறை அது. 48


அளவு (நீல அகலம்) பலன்


ஏழு அடி நினைத்த செயல் நிறைவேறாமல் நோயுண்டாகும்.
எட்டு அடி எண்ணிய செயல் முடியும். பகைவர் விலகுவர். பட்டமரமும் தளிர்க்கும்
ஒன்பது அடி ஆயுள் குன்றும்-மனையாள் இறப்பாள் -
பத்து அடி கால்நடை கன்று கால்கள் பெருகும்: வேளாண்மை விருத்தியாகும்
பதினோரடி பாலும் சோறும் நிறையும் பயிர்த்தொழில் வளரும்
பன்னிரண்டு அடி செல்வம் நலியும், வருத்தம் மிகுதியாகும்.
பதின்மூன்று அடி எண்ணிய செயல் இயலாது. உறவினர் உகைவர் ஆவர்.
பதினான்கு அடி தொல்லைகள் மிகும் - இன்ப அழிவு. உயிர்ச்சேதம்
பதினைந்து அடி நோயால் சாவு-பாவம் - செல்வம் வந்து சேராது -
பதினாறு அடி செல்வ வளர்ச்சி, புத்திரப்பேறு. பகைவர் விலகுவர் .
பதினேழு அடி பகைவர் வணங்கிப்பணிவர். இறையருள் சித்தி-அரச பதவி கிட்டல்.