பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71


இதன் பலன் திருடர் அச்சமும் நச்சுப் பிராணிகள் பற்றிய அச்சமுமாம்.

தெற்கு, மேற்கு, வடக்கு, கட்டின வீட்டிற்குக் கிழக்கு அவடத்தில் வாசற்கால் வைத்தால் அதற்குப் புத்திர முஷ்டிகம் என்று பெயர்.

இதன் பலன் அச்சம்.

வடக்கு, கிழக்கு, தெற்கு கட்டின வீட்டுக்கு மேற்கு அவடத்தில் வாசற்கால் வைத்தால் அதிசயம் எனப்பெயர். எப்போதும் இருவகை மரம் கலந்த வாசற்கால் ஆகாது.

இதன் பலன் ஆனி. (கெடுதல்)

கிழக்கு, மேற்கு தெற்கு, வடக்கு -கட்டின வீட்டுக் வடக்கில் வாசற்கால் வைத்தால் நல்ல சுகமுண்டாகும்.

மேற்கு கிழக்கு வடக்கு இந்த மூன்று பக்கத்திலும் வாசற்கால் இருந்தால் கலியாணபதம் எனப்படும்.

இதில் செல்வம் உண்டாகும்.

கிழக்கு, தெற்கு மேற்கு, வடக்கு இந்த நாலு பக்கத்திலும் வீடு கட்டியிருந்தால் அதற்குச் சதுரச் சாலை என்று பெயராம்.

இதன் பலன் உத்தமம் என்கிறது மனைநூல். இவற்றிற்கு வாசல் இராசி பார்ப்பது எனப் பெயர் குறிக்கப்படுகிறது.

சங்கு வைத்தல் .

கட்டடம் கட்ட மனை முகூர்த்தம் செய்யும்போது, சங்கு வைத்தல் என்றொரு வழக்கமும் உண்டு. இதில் திசை - ராசி முதலிய பொருத்தமும் பார்க்க வேண்டும்.58

ஒரு மங்கலப் பெண்ணின் கையால் சங்கு வைக்க வேண்டும். இறை வழிபாட்டுக்குப்பின் சங்கு வைப்பது வழக்கம்.