பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கிழக்குப் பகுதியில் வாசல் இல்லாமல் மற்ற மூன்று பக்கங்களில் வாசல் வைப்பது அவ்வீட்டில் கால்நடைகள், விருத்தி, முன்னேற்றம் யாவும் ஏற்படச்செய்யும்.

தெற்குப் பகுதி வாசல் அமைக்காமல் மற்ற மூன்று பக்கங்களிலும் வாசல் வைப்பதால் செல்வமும் நலப் பெருக்கமும் உண்டாகும்.

வீட்டினுள் நுழையும்போது வாசலில் தலை குனியாமல் நிமிர்ந்தபடி நுழைவது நல்லதில்லை என்கிறது மனைநூல். அதாவது வாசல்களை மிகவும் உயர்வாக வைக்கக்கூடாது. அப்படிப்பட்ட வாசல்களால் சஞ்சலமும் கவலையுமே உண்டாகுமாம்.

வீட்டினுள் நுழையும் போது சிரம் குனிந்து வண்ங்குவது போல் புக ஏற்றபடி வாசல்கள் தணிவாக அமைவதே நல்லது என்கிறது மனைநூல். இலக்குமி கடாட்சம் இப்படியான வாசல்களில்தான் நிலைக்குமாம்.

கட்டிய சுவர் பிளவுபட்டுத் தெரிந்தால் வீட்டுக்கு நல்லதில்லை. வீட்டின் சுவர்கள் நான்கு பக்கமும் சம உயரமாக மேல் சாயையாக இருப்பதும் தாழ்வாரம் போன்றவை சம அகலமாக இருப்பதுமே ஏற்றமான பலன் ஆகும். பாதி வீடு கட்டுகையில் சுவர் சிதைவது நல்ல அறிகுறி இல்லை. பிரதானமான சுற்றுச்சுவர் தாய்ச்சுவர் எனப்படும். தாய்ச்சுவர் முதல் உள்புறம் உள்ள சுவர்கள் எல்லாம் ஒன்றரை அடி அகலத்திற்குக் குறையாமல் அமைய வேண்டும். அதுபோல வீட்டிற்குப் பட்டறை மட்டம் ஒன்பதடி உயரத்திற்குக் குறையாமல் அமைய வேண்டும்.

வீட்டின் வாசற்படிக்கு எதிரில் (மேலே மூளியான சுவர் - இது குட்டிச் சுவர் எனவும் கூறப்படும்) கட்டைச் சுவர் இருப்பது நற்பலனைத் தராது. வீட்டுக்குள் ஏறி வரும்படி உயர்வாகவும் உள்பகுதிக்கு வரும்படிகள் தாழ்