பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
79
 

ஆண்குரற் செக்குப் போல் ஓசை எழுமாயின் குபேரன் போல் மனைவி மக்களுடன் நீடு வாழ்வர். பெண்குரற் செக்கு போல் ஓசை எழுமாயின் மனையில் செல்வம் கொழிக்கும்.

தும்பி போல் கதவு ஒலி எழுமாயின் மனையில் வம்பும் பேய்க் கூட்டமும் மிகுந்து பொலிவு குன்றும். சிறுமை மிகும்.65

பேரிகை மேளம் போல் கதவு ஒலி உண்டானால் பெண்கள் துயரடைவர். நோய் மிகும். காரியம் கை கூடாது. ஊரை விட்டு அகலத்துரத்தும்.

வேறு சில நம்பிக்கைகள் வழக்கங்கள்

வீடு கட்டுமுன் நட்சத்திரப் பொருத்தம், இராசிப் பொருத்தம் தவிர்த் தமிழர் வேறு சில பொருத்தங்களை யும் பார்த்தனர். பெயர் எழுத்துக்களை வைத்தும் பொருத் தம் பார்க்கப்பட்டிருக்கிறது.

திங்கள் கிழமை கால் நாட்டி புதன் கிழமை கை வைத்து வெள்ளியன்று கூரை வேய்ந்து, வியாழக்கிழமை குடி புகுந்தால் இந்திரபோகத்தோடு வாழமுடியும் எனப் பொதுவாக ஒரு நம்பிக்கை நிலவி வந்தது. மாதம் இராசி, திசை ஆகியவற்றிற்கு ஏற்ப வாசற்கால் வைக்கும் வழக்கமும் தமிழர்களிடையே நெடுங்காலமாய் நிலவி வந்திருக்கிறது. ஒவ்வொரு திசை நோக்கி வைத்த வாசற்படிக்கும் சில லட்சனங்கள் கூறப்பட்டுள்ளன.

கிழக்குப் பார்த்த - வடக்கிழக்கு மூலை முதல் தென் கிழக்கு மூலை வரை அளந்து எட்டு பாகம் செய்து பலன் கர்ண வேண்டும்.
மேற்குப் பார்த்த - தென்மேற்கு மூலை முதல் வடமேற்கு மூலை வரை