பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


சாத்திரம் என்று வழங்கும் சொல்லுக்கு ஒழுங்கு, கட்டளை, கலை, நூல், மறை எனப் பல பொருள்கள் உண்டு. எப்பொருள் கொள்ளினும் அங்கு ஏற்கிறது.

மனையடி சாத்திரம் என்பதற்கு வீடு கட்டும் கலை என்பது பொருளாகிறது.

இதே நூல் சிற்ப நூல், சிற்ப சிந்தாமணி, சிற்ப ரத்தினம் என்னும் வேறு பெயர்களிலும் வழங்கி வருகிறது. 71

இம்மூல நூலை வடமொழியில் மயன் எழுதியிருக்கிறார். தமிழ் விருத்த யாப்பிலான நூல் முதல் முதலாக 1888ம் ஆண்டில் அச்சாகி வெளிவந்துள்ளது.

மயன் ஒரு தேவதச்சன். நுண்கலை வல்லுநன். சிற்பி. இவன் தந்தை காசியப முனிவன் என்றும் தாய் திதி என்றும் அரசுப் பெண் என்றும் கூறுவர். சிற்ப சாத்திர மூல நூலை இயற்றியவன் இவனே. இவன் மாளிகைகளும் அரண்மனைகளும் நகரங்களும் அமைப்பதில் வித்தகனாக விளங்கியிருக்கிறான். இவனுக்கு மாயாவி துந்துபி என இரு புதல்வர்களும் மண்டோதரி என ஒரு மகளும் இருந்தனர். மண்டோதரி இராவணனை மணந்தாள்.

ஒரு காலை மயனின் உயிரை அருச்சுனன் காப்பாற்றி உதவியதற்கு நன்றியாக மயன் ஓர் அலங்கார மண்டபம் நிர்மாணித்துப் பாண்டவர்களுக்கு அளித்ததாகப் பாரதம் கூறும்.

மயனுக்குப் பின்வந்த வம்சாவளியினரும் அதே பெயரால் அழைக்கப்பட்டனர்.

மயனுடைய மரபினர் தெய்வகம்மியராகிய துவஷ்டா என்னும் விசுவகர்மாவுடைய மரபினருக்கு பயந்து ரோகமபுரியிற் குடியேறி அசுர கம்மியராகிய அவர்களுக்குப்