பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

97


உள்ளலங்காரம்

இக்காலக் கட்டடக் கலையை போலவே இவ்விரு கூறும் அன்றுகூடச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இன்று வளர்ந்துள்ள உள்முக அலங்கார வகைகளை அன்றே தமிழரிடம் காண முடிகிறது. அரண்மனையை மேலோட்டமாக (Surface) வருணித்த நக்கீரர் இனி அவ்வரண்மனையில் தலைவி இருந்த பகுதியின் உட்புற எழிலை வருணிக்கிறார். இப்பகுதியிலிருந்து கட்டிடக் கலையின் நுணுக்க வேலைப்பாடாகிய உள்ளழகு செய்தல் (Interior Decoration) புலப்படுகிறது.

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரை கண்டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணி கண்டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்25

யவனர் எனப்படும் சோனகர் செய்த தொழில் மாட்சிமைப் பட்ட கையில் விளக்கு ஏந்திய பிரதிமைகள் - அவ்விளக்கில் அது எரிய நெய் சொரியப்பட்டு நிற்க அவற்றின் திரிகள் மேல் நோக்கிச் சுடர் பரப்பி எரிய இருள் நீங்கிய பெருமை பொருந்திய சிறப்புடையது. காவல் நிரம்பிய பாண்டியனின் அரண்மனையில் மலையை ஒட்டி வானவில் போலப் பெரிய கட்டடங்களில் பல நிறக் கொடிகள் தோன்றின. அந்த அரண்மனையின் நடு இடம் (கருப்பக்