பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


கிருகம்) வெண்ணிறச் சுண்ணம் பூசிய செம்பிலியன்றது போலும் சுவர்களையும் பல தூண்களையும் கொண்டு விளங்கியது. சுவரில் பூங்கொடிகள் எழுதப் பெற்றிருந்தமை இந்நாளையச் சுவர் அணித்தாள் (Wall Decoration Paper) ேபான்ற உள்ளலங்கார (Interior Decoration) அமைப்பாகத் தோன்றுகிறது.

அரண்மனை நடு இடச் சுவரைச் “செம்பிலியன்றது போல் என ஒப்பிடும் வழக்கம் பிற பாடல்களிலும் காணக் கிடக்கிறது. மதுரைக் காஞ்சியில்,

செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து 27

என வருவதை இங்கு ஒப்பு நோக்க முடிகிறது. அறை உள்ளலங்காரத்தின் அடுத்த பகுதியாக அக் கருப்பக் கிருகத்தில் இருந்த கட்டிலின் வருணனை வருகிறது.

இறைவன் கோயிலின் நடு இடத்தைக் கருப்பக்கிருகம் என இக்காலத்தில் அழைப்பது போல அரசன் கோயிலின் நடு இடத்தைக் கருப்பக்கிருகம் என அழைத்தமை பத்துப் பாட்டு-நெடுநல்வாடையில் நச்சினார்க்கினியர் உரையில் இருந்து தெரிகிறது28

இப்பகுதியில் வரும் கட்டில் வருணனை நேரடியாகக் கட்டடக் கலையோடு தொடர்பற்றது எனினும் கருவறையின் உள்ளலங்காரத்தை விளக்குகிறது.

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையப் பொளீஇத் துகடீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து
மெல்லி தின் விரிந்த சேக்கை மேம்படத்