பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு நூல்களுள் நிலவும். நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் தழுவியதாகும்.

செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாதலால், ஒவ்வொரு செய்யுனி பொருளும் தனியே நின்று அந்தச் செய்யுளிலே முடிந்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு செய்யுளாக மனப்பாடம் செய்து, ஒவ்வொரு கருத்தாக உளமேற்றி, ஒவ்வொருவரும் உயர்வதற்கு இந்நூல் உதவியாக அமைந்துள்ளது. முன்றுறை அரையனார்.பலப்பலகாலங்களில் தம்முடைய மாணவர்கட்கு அறிவுறுத்தக் கூறிய செய்யுட்களின் தொகுப்பாக அமைந்ததே இந்நூல் என்றும் கருதலாம். அறிவாளர்கள், தாம் சொல்லக் கருதும் உண்மைகளை விளக்குவதற்கு வழக்கிலுள்ள முதுமொழிகளை எடுத்துப் பயன்படுத்துவது இயல்பே என்பதையும் இந்நூலாற்காணலாம். இந்நூலுக்குரிய பால் இயல் அதிகாரப் பகுப்புக்கள் போன்றவற்றை முன்னோர் செய்துள்ளதாகத் தெரியவில்லை. இந்நூலை அச்சிட்டபிற்காலத் தமிழறிஞர்களே இந்தப்பகுப்பு முறைகளைச் செய்துள்ளனர் என்று தெரிகின்றது. -

முதன்முதலாக, இந்தப் பழமொழி நானுறை அச்சேற்றி வெளியிட்டவர்கள் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாவர். 1874), இதனையடுத்து நிசு.ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது (1954). இதன்ையடுத்து கி.பி.1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது. ஏட்டுப் பிரதிகளில் கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பும், திருநாராயண அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) பதிப்பும் கி.பி.1918-1922) இந்நூலின் செழுமையைத் தமிழ் அன்பர்களிடம் பரப்பின.

திருமணம் செல்வக் கேசவராய முதலியாரவர்கள் பத்து. பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப்பகுப்புகளையும் பால் இயல் என்னும் பகுப்புக்களையும் செய்து, சிறந்த உரையுடன் இந்நூலை அருமையாக வெளியிட்டு உதவினார்கள்.

இந்த நிலையிலே, பழமொழிகளுக்கே, முதன்மை தரவேண்டும் என்னும் எண்ணத்துடன், இந்நூலிலே பயின்று வரும் பழமொழிகளைத் தொகுத்து அகரவரிசைப் படுத்திக்கொண்டு, அந்த அகரவரிசைக்கு ஏற்றபடி