பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

87



உடையவனே முட்டுப்பாடு ஏதும் இல்லாமல் ஒருவர் வள முடையவராயிருக்கின்ற சமயத்திலே, அவர் வீட்டிலே சமைத் த்தைத் தின்பவர்கள் ஆயிரம் பேர்களாக இருப்பார்கள். அவர்கள், துன்பம் வந்து அழிவெய்தப்போகும் நிலையடைந்த காலத் திலோ, கேடுற்ற அவர்களுக்கு உதவும் நண்பர்கள் எவருமே இலராவர். - -

முட்டின்று ஒருவர் உடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே . கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ இல். 'இருந்தால்வருபவர் ஆயிரம்பேர் இழ்ந்தால்வருபவரோ எவரும் இலர் என்பது கருத்து. ‘கெட்டார்க்கு நட்டாரோ இல் என்பது பழமொழி. 177 178. பொல்லாங்கு பேசுவார் நட்பு

நாம் சிறந்தவரென்று நண்பராகக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி, மற்றொருவர் டிொல்லாங்குபடப் பேசு கின்றதை அறிந்தால், இவர் நம்மையும் பற்றிப் பிறரிடம் இப்படித்தானே பேசுவார் என்று கருதி, அவரை நண்பராகக் கொள்ளாது விடுக. வேம்பு, தேவர்களே தின்றாலுங்கூடக் கசக் கவே செய்யும்.அதுபோல, அவர்களும் எவரிடத்தேயானாலும் நல்ல்முறையில் நடக்கவே மாட்டார்கள். x. -

தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால் இற்றே அவரைத் தெளியற்க--மற்றவர் யாவரேயாயினும் நன்கொழுகார் கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு. - 'பிறர் பொல்லாங்கு பேசுபவரோடு நண்பராயிருத்தல் கூடாது' என்பது கருத்து கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு’ என்பது பழமொழி. 178 179. கொடுப்பவன் கெடுவதில்லை - நெருங்கி வளர்ந்திருக்கின்ற, இருள்போன்ற, கரிய, ஐவகையாக முடிக்கும் கூந்தலை உடையவளே! தம்மை வந்து அடைந்து ஒன்றை யாசித்து நின்றவர்களுக்கு அந்த ஒரு பொருளைக் கொடுத்தவர்களை அப்படிக் கொண்டவர்களே. பிற்காலத்து இவர் ஏழையாவர் என்று சொல்லிப்போனாலும் போகட்டும்; எத்தகையவர்களுக்கே யானாலும் கொடுத்து அதனால் ஏழையாயினவர் எவரும் இல்லை.