பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பழமொழி நானூறு மூலமும் உரையும்



அடுத்தொன் றிரந்தார்க்கொன் lந்தாரைக் கொண்டார் படுத்தேழை யாமென்று போகினும் போக - அடுத்தேறல் ஐம்பாலாய் யாவர்க்கேயர்யினும் கொடுத்தேழை யாயினார் இல்.

வாங்கிச்செல்பவரே நன்றியில்லாமல் பழித்துச்செல்லும் காலத்தினும், கொடுத்தவர் ஏழைமை அடைவதில்லை என்பது கருத்து,'கொடுத்தேழையாயினார் இல் என்பது பழ்மொழி.179 180. கொடையின் அளவு

தன்னுடைய புகழைப் பாக்களாகத் தொடுத்துப் பாடிய பெரும்புலவனான கோதமனின் சொல்லிலே வெளிப்பட்ட, அவனுடைய குறையானது தீரும்படியாக, துறக்கத்தை யானும் என்னவரும் அடையத் தருவாயாக என்றவனுக்கு, அதற்குரிய வேள்வியியற்றி அவனை அனுப்பி வைத்து, வாழ்வீராக என வாழ்த்தியும் விடை கொடுத்தான் சேரமான். அதனால், இரப்ப வர்களை, இன்ன தன்மையர் என்று கருதவே வேண்டாம், கொடுக்கின்றவர் தம்முடைய சிறப்பின் அளவை யறிந்து அதற்கேற்பவே கொடுப்பார்கள்.

தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்; தொடுத்தின்னர் என்னலோ வேண்டா, கொடுப்பவர் தாமறிவார் தம்சீர் அளவு. -

கொடை,கொடுப்பவர் தகுதியை ஒட்டியதே வாங்குபவர் தகுதியை ஒட்டியதன்றென்பது கருத்து கொடுப்பவர் தாமறி வார் தம் சீர் அளவு’ என்பது பழமொழி. இங்கே குறித்தது பாலைக்கோதமனாரை, 180 181. மனக்கசப்புத் தரும் கடன் o

கடனாகக் கொண்ட ஒரு சிறந்த பொருளைக் கடனாளி யின் கையிலே விட்டு வைத்திருப்பவர்கள், அவரிடத்திலே சென்று, எம் பொருளை இன்றே எமக்குத் தருவீராக என்றால், அவர் தருவதே முறை. அஃதன்றிப், பகையினை மேற்கொண்டவர் போலப் பேசத்தொடங்கி, அந்தப் பொருளைக் கடனாகப் பெற்றுக் கொண்டவர் வெகுண்டால், அது விளையாட்டாகச் சொன்னதேயானாலும், மனக் கசப்பைத் தருவதாய் விடும்.

கடங்கொண்ட பொருளைக் கைவிட் டிருப்பார் இடங் கொண்டு தம்மினே என்றால்--தொடங்கிப்