பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

89



பகைமேற்கொண் டார்போலக் கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய் விடும்.

வாங்கிய பொருளைத் தந்தவர் கேட்டதும் கொடாமல் இருப்பது மிகவும் தவறு. 'கொண்டார் வெகுடல் நகை மேலும் கைப்பாய் விடும்’ என்பது பழமொழி. - 181

182. வித்தைப் பொரிக்கும் மூடர் - -

தம் உள்ளத்திலே ஆசைகள் அற்றவனாக அடங்கியிருந்து, ஐம்புலன்களையும் தம் ஆணைக்குள் அகப்படுமாறு செய்து, அவை மேற் செல்லாதபடி காத்துத் தாம் ஏற்றுத் தொடங்கிய துறவுநெறியின்கண்,மனம் வாக்குக்காயம் என்ற மூன்றினாலும் மாட்சிமையுடையவராகவிளங்கி, இவ்வுலகத்தே உடம்பானது ஒழிந்துபோகுமாறு கைவிட்டுச் செல்லும் மறுமை நெறிக்குப் பாதுகாவலான உறுதியை, இளமையிலேயே செய்யாதவர்களே, தீயின் மீது விதை நெல்லைப் பெய்து பொரித்து உண்ணும் மூடர்களாவார். - - -

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத் தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு-- உடம்பொழியச் செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே கொள்ளிமேல் கொட்டு வைத்தார்.

விதைநெல்லால்பின்வரும்பயன்கருதாமல்,வாய்ச்சுவைக்கு அடிமையாகிப்பொரித்துத்தின்பவர் அறிவிலிகளே உடலெடுத் ததன் பயனாக உயிர்க்கு உறுதிதரும் காரியங்கள் செய்வதை மறுத்து உடலின்பங்களிலே ஈடுபடுபவர் ஆவர்.'கொள்ளிமேல் கொட்டு வைத்தார்’ என்பது பழமொழி. 'வித்துக் குற்றி உண்டாங்கு என்பதும் இந்த மடமை.குறித்ததே. 182 183. சொல்லால் வளைக்கவும் -

‘யாம் உலகனைத்தையும் ஆள்வோம்’ என்று சொல்லும் அரசர்கள், வரையறை என்பதொன்று இல்லாமல், தீமை செய்த வர்களையுங்கூட அவசரப்பட்டுக் கோபித்துக் கொள்ள மாட் டார்கள். வீட்டுத் தோட்டத்திலே ஒருவன் தனக்குப் பயன் தருமாறு வளர்த்துவரும் மரத்தைப் போலச் சொற்களால் அவனை வளைத்துத் தமது அடி நிழலின்கீழ் இருக்கச் செய்து அடக்கியே கொள்வார்கள். - -

எல்லையொன்று இன்றியே இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளார் உலகாள்தும் என்பவர்

.#