பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\

90 பழமொழி நானூறு மூலமும் உரையும்

சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே கொல்லையுள் கூழ்மரமே போன்று. மன்னர்கள், தம் பகைவரையும் தமக்கு அடிப்பட்ட வராக்கி ஆள்தலையே செய்யவேண்டும் என்பது கருத்து. 'கொல்லையுள் கூழ் மரமே போன்று என்பது பழமொழி கூழ் மரம்-கூழைப்பலாமரமும் ஆம்; பயன்தரும் பழமரமும் ஆம்,183 184. குடிப்பிறப்பும் பண்பும் -

தாம் கற்றது ஒரு நூலேயாயினும், இல்லாதுபோயின காலத்தினும்கூட, நல்ல குடியிலே பிறந்தவர்கள், கல்வி ஒன்றை மட்டுமே அறிந்தவரினுங் காட்டில், மாட்சிமைப்பட மிகவும் நல்லவர்களாகவே விளங்குவார்கள். கற்றோர் நல்ல பண்பு களைப் பற்றி அழகுடனே சொல்வதற்காக அவரிடம் செல்ல வேண்டாம், கொல்லர்களுடைய குடியிருப்பிலே சென்று தைக்கும் ஊசியை விலைகூறுவோர் இல்லையல்லவா!

கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார் மற்றொன்றறிவாரின் மாணமிக நல்லரால் பொற்ப உரைப்பான் புகவேண்டா, கொற்சேரித் துன்னுசி விற்பவர் இல். நல்ல குடியிற் பிறந்தவர்களிடம் படிந்திருக்கும்பண்புநலம் சொல்லப்பட்டது. கொற்சேரித் துன்னுசி விற்பவர் இல்’ என்பது பழமொழி. - 184 185. சிறந்ததைச் சிறந்ததே வெல்லும்

விரும்பப்படும் அணிகலன்கள் அணிந்த பெண்களின், வெருண்ட மானின்பிணை போன்ற மடமையான பார்வையா னது, ஆடவரிடம் நிறைந்திருக்கும் நாணத்தினையும் வெளிப் படாமல் மறைக்கும் வல்லமை உடையதாகும். யமுனை நதியி னிடத்தேதிருமாலையுங்கூடப்பின்னைஎன்பவள்தன்னழகினால் முன்னம் நாணிழந்து மயங்கச் செய்தனள், அதுவே ஒரு சிறந்த பண்பினை, மற்றொரு சிறந்த பண்பே அழிக்கின்றதன்மை ஆகும்.

விழுமிழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும்--தொழுநையுள் மாலையும் மாலை மயக்குறுத்தாள், அஃதால் சால்பினைச் சால்பறுக்கு மாறு.

மகளிரின் வெருண்ட நோக்கம் ஆடவரின் தகுதியை மறைத்து அவர்க்கு அவரை அடிமைப்படச் செய்வதென்பது