பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

புலியூர்க் கேசிகன் * . 95

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புண்ருமோ?--ஆற்றச்

சுரம்போக்கி உலகுகொண்டார் இல்லையே; இல்லை w மரம்போக்கிக் கூலிகொண் டார். -

உரிய காலத்திலே செய்யாமல், பின்னர் செய்வோமென ஒதுக்கிவைப்பது எதுவும் உருப்படுவதில்லை என்பது கருத்து. - ‘சுரம்போக்கி உலகுகொண்டார் இல், மரம்போக்கிக் கூலி கொண்டார் இல்லை என்பன பழமொழிகள் 194 195. நடவாத செயல்கள்

மலையினின்றும் வீழ்கின்ற அருவிகள் விளங்கும் மலை நாடனே! புகழ் நிறைந்தவரான சான்றோர்கள் வறுமையினா லேயே ஒடுங்கி வாழ்கின்றபோது, நல்ல குடிமரபினர் கூட்டத் தினை இல்லாதவரான கயவர், செல்வத்தால் தலை நிமிர்ந்து பெருமை பெறுதல் ஆகிய இதுவே, சுரை நீரில் அமிழ்வதையும் அம்மி மிதப்பதையும் போன்றதாகும். -

உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே சுரையாழ அம்மி மிதப்ப. சுரை தாழ்வதில்லை; அம்மி மிதப்பதும் இல்லை. அதுபோலச் சான்றோர் பெருமை குறைவதுமில்லை; கீழோர் செல்வராய் நிமிர்ந்தாலும் சிறப்பதுமில்லை என்பது கொள்க. "சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது பழமொழி. 195. 196. அறிவில்லாதவனின் முடிவு -

பெண்மான்கள் தம்முடைய துணைகளை அழைத்துக் கொண்டிருக்கும் சிறந்த மலைநாடனே கற்க வேண்டிய நூல் களைக் கற்ற அறிவுடையவர் பலரைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத ஒர் அரசன், யாதாயினும் துன்பம் வந்து இடப்பட்ட பொழுதிலே தானே கொள்ளும் முடிவானது, சுரை பொருந்திய யாழின் நரம்பை அறுத்துவிட்டு இசைக்க முயல்வதுபோன்றதாகும்

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரும் மாமலை நாட! சுரையாழ் நரம்பறுத் தற்று.