பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நரம்பறுத்தபின் யாழிலே இசை எழாது; அவ்வளவு முடத்தனமாக இருக்கும் அவன் முடிவு என்பது கருத்து. அமைச்சர்கள் கல்வியில் வல்லவராக இருத்தல்வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. சுரையாழ் நரம்பறுத் த்ற்று' என்பது பழமொழி. 196 197. அதிக வரியும் அதன்பின் உதவியும்!

தன்னை முற்றவும் பாதுகாவலாக எண்ணி அடைந்தி ருக்கின்ற குடிகளைத், தீயவைகளைச் செய்து துன்புறுத்திக் கொடுக்கும் இயல்பு உடையவனாக இருக்க வேண்டிய அரசன் கொடுங்கோலனாக மாறிக் குடிகள் மேல் கொள்ளும் இறைப் பொருளை அளவுக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்டுபின்னர் அவருக்கு உதவுதல்,மயிலினது உச்சிக்கொண்டையை அறுத்து, அதற்கு உணவாக அதன் வாயிலே இடுவது போன்ற தாகும்.

அடைய அடைந்தாரை அல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் குடிகள்மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ சூட்டறுத்து வாயில் இடல்.

"துன்புறுத்தி அதிக வரிவாங்கியவன்,பின் என்ன நன்மை செய்தாலும் மக்கள் அவனைப் போற்ற மாட்டார்க்ள் என்பது கருத்து.'சூட்டறுத்து வாயில் இடல்’ என்பது பழமொழி. 197 198. அரசாணையை நிறைவேற்றல்

வெற்றிச் சிறப்புடைய வேலினனான வேந்தன் ஏவல் கொண்டால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையேயாகும்.அவன்ஏவலை எவ்விதக்குறை பாடும் இல்லாதவராகச் செய்து முடிக்க அதுவல்லவோ,செய்க என்றவன், பின் உண்க என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும். வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும் பெற்றிலே மென்பது பேதமையே.--மற்றதனை எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ செய்கென்றான் உண்கென்னு மாறு.

செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசு தராமற் போவதில்லை என்பது கருத்து. ‘செய்கென்றான் உண்கென்னு மாறு’ என்பது பழமொழி. 198 199. அரசன் செயலுக்குப் பொறுப்பு எவர்? - புவளத்தைப் போன்ற சிவந்த வாயிதழ்களையும், புன்முறு வலையும், நன்மைதரும் சிலவாகிய பேச்சையும் உடையவளே!