பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

99


|

204.நத்தைபோலச் சேமிக்க - -

அழகாகக் குளிர்ந்த அருவிகள் பல வீழ்ந்து கொண்டிருக் கின்ற மலைநாடனே எதிர்காலத்தின் நெடும்ையை நோக்கி, நத்த்ையானது நீரைத் தன்னிடத்தே சேமித்து வைத்துக் கொள் வதைப்போலத் தத்தமது பொருள்களையும், தம் சுற்றத்தாரின் வலிமையையும், முற்படவே ஆராய்ந்து, பிற்காலத்தில் உதவியா யிருக்கும் பொருட்டாகச் சேமித்துப் பாதுகாத்து வைத்துக் கொள்க. - -

தந்தம் பொருளும் தமர்கண் வளமையும் முந்துற நாடிப் புறந்தரல் ஒம்புக அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று.

சுற்றம் வலிமை குறைந்த காலத்துத் தமக்கே சுமையாகு மாதலால், அவர் வள்மையையும் காக்க வேண்டும் என்றார். "சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று’ என்பது பழமொழி. தொலைநோக்கோடு பொருளாதார வலிமையைக் காப்பதே அரசின் கடமை என்பது இது. 204 205. சொல்லும் அறிவும் - .

நூல்களைக் கற்று அறிந்திராத ஒருவன்,வினைப்பயனால் தான் கண்டறிந்த மிகவும் நுட்பமான பொருளையும் பிறருக்கு விளக்கிக் காட்டுவதற்கு இயலாதவனாகியிருப்பான். அவன், நாம்,'நல்ல அறிவுடையேம் என்று தன்னைத்தானே பெருமை பாராட்டிக் கொள்ளல் எதற்காகவோ? சொல்லாற்றலி னாலேயே தம் பகைவரைத் தமக்குப் பணியச் செய்து வெற்றி கொள்ளக்கூடிய தகுதியும் வல்லமையும் உடையவர்களுக்கும் தாம் கருதியதைச் சொல்லாற்றலுடன் சொல்ல முடியாமற் போன இடத்துச் சொல்லப்பட்ட அந்த ஆற்றலும் அவர்பால் இல்லையாகும். .

கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால் நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென் சொல்லால் வணக்கி வெகுண்டு அருகிற்பார்க்கும் சொல்லாக்கால் சொல்வது இல். - அறிவு வேறு கல்வி வேறு. அறிவைக் கல்வியால் செப்பம் உடையதாக்கிச்சொல்லாற்றலுடன் விளங்கவேண்டும் என்பது கருத்து. சொல்லாக்கால்-சொல்வது இல்’ என்பது

பழமொழி - . . - 205