பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பழமொழி நானூறு மூலமும் உரையும்



206. தற்புகழ்ச்சி வேண்டாம்

செருக்குடன் செல்லும் பகைவரை வென்றவர்கள் தம்மீது

பிறர் எல்லாம் வந்து பெருமைப்படுத்திப் பாராட்ட அதனால்

தம் உள்ளம் சுளித்தாலும்,தம்மிடத்தே உள்ளதாகும் வீரத்தைப்

பற்றிச் செம்மாப்புடன் சொல்லாதிருத்தலையே விரும்புக.

அப்படியிருப்பதுதான், தன் குறைபாடுகளைத் தானே மிகுத்துக்

கூறாதவாறு ஆகும். - - W

- செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்

தம்மேற் புகழ்பிறர் பாராட்டத்-தம்மேற்றாம்

வீரஞ்சொல்லாமையே வீழ்க களிப்பினும் சோரம் பொதியாத வாறு.

வீரர்கள், பிறர் பாராட்டுதலை உச்சிகுளிர்ந்து போனவர் களாகத் தம்முடைய ஆற்றல்களை மிகுத்துப் பேசுவது கூடாது. அப்படிப் பேசுவது அவரின் தளர்ச்சியை அவரே வெளியே காட்டுவதாக முடியும் "சோரம் பொதியாத வாறு’ என்பது பழமொழி -. 206 207. ஊதியம் இல்லாத வேலை -

தம்முடைய சொந்த வண்டியேயானாலும் உயவுநெய் இல்லாமற் செல்லமாட்டாது. அதுபோலத் தாம் அச்சாணி யாகக் கருதிக் கொண்ட செயலை முடிக்குமாறு பிறர் ஒருவரை ஒன்றும் ஊதியம் தராமலே ஏவினால், பத்தாண்டுகளாயினும் மிகவும் மெதுவாகவே அவர்கள் அதனைச் செய்வார்கள். காணியளவு பொருளாயினும் தமக்குப்பயனாகப் பெறாமல் ஒரு காரியத்தைச் செய்பவர்கள் எவருமே இல்லையாவர். ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளின்--காணி ه. பயவாமல் செய்வாரார் தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலோ இல். ஊதியம் தராமல் வேலை ஏவினால், அந்த வேலை ஒரு போதும் முடியாதென்பது கருத்து.'தஞ்சாகா டேனும் உயவா மல் சேறலோ இல் என்பது பழமொழி. - 207 208. குலப் பண்பு மாறாது

தீயினது புகையைப்போல மேகங்கள் பரவி உலாவுகின்ற மலைநாடனே மந்தையைக் காக்கும் இடையனுக்கு மகளாகப் பிறந்தவள், நாடு காக்கும் அரசனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தும்,