பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

103



பிறர் செய்வது என்பது ஒன்று இருக்கிறதோ? அப்படி ஏதும் இருப்பதில்லை. தமக்கு வரும் நோயைத் தடுக்கும் மருத்துவர் தாமே என்பதை, ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். -

எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித் தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வதுண்டோ, மற்றில்லை தமக்கு மருத்துவர் தாம். தமக்கு வரும் நோயைத் தாமே முயன்று தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிரப், பிறர் தீர்ப்பாரென நினைத்து வாளாவி ருந்தால் நோய்தீராது. அதுபோலவே, தன் காரியத்தைத்தானே செய்து முடிக்கவேண்டும் என்பது கருத்து.'தமக்கு மருத்துவர் தாம் என்பது பழமொழி. 212

213. கற்றவரோடேயே தொடர்பு கொள்க

தம்முடைய சொந்தக்காரர்கள் என்பவர் எவருமே இல்லாத ஒருவர்க்கு, நகரத்து வாழ்வுங்கூடக் காட்டின் வாழ்வு போலத் தனிமையுடையதாகவே இருக்கும். ஏனென்றால், அவருடன் அவருடைய ஆசாபாசங்களைக்கூடி அநுபவிப்பவர் யாரும் இல்லையாதலினால், எல்லாப் பொருள்களும் விரும்பிச் சேர்ந் திருக்கின்ற மலைநாடனே! அதுபோலவே, கல்வியறிவினால் உண்டான சிறந்த நுட்பங்களும், கற்றறிவற்ற வர்கள்முன் நல்ல முறையிலே எடுத்துச் சொல்லப்பட்டாலுங் கூடத் தீயவைகளாகவே கொள்ளப்படும்.

கல்வியான் ஆக கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்-எல்லாம் இவர்வரை நாட! தமரையில் லார்க்கு நகரமும் காடுபோன் றாங்கு. கற்றவர்,கற்றவரிடத்திலேயே நுட்பமான பொருள்களைச் சொல்லவேண்டும். அப்போதுதான் மதிக்கப்படுவார் என்பது கருத்து.'தமரையில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு என் பது பழமொழி. நகரம் - பலர் கூடி வாழ்வது; காடு - தனித்து வாழ்வது 213 214. வஞ்சகமான வெளி வேடம் - r

இம்மையிலே செய்யப்படுவதான தவமுயற்சிகளும் அறச்செயல்களும் என்று சொல்லப்பட்ட இரண்டு நெறிகளும் தம்பால் உடையன என்று சொல்பவர்கள், அவற்றை நெறி பிறழாது செய்தல் வேண்டும். அப்படியில்லாமல், அவற்றிலே