பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பழமொழி நானூறு மூலமும் உரையும்



மன ஈடுபாடில்லாமல் ஒழுகிவந்தனரானால், அதனால் இம்மை யிலேயே பழியேற்படுவதும் அல்லாமல், மறுமை வாழ்வினும் தம்மைத் தாமே பிணித்து நரகிற் கொண்டு செலுத்தும் கயிறாகவும்.அதுவே ஆகிவிடும். *

இம்மைத் தவழும் அறமும் எனவிரண்டும் தம்மையுடையார் அவற்றைச் சலமொழுகல் இம்மை பழியேயும் அன்றி மறுமையும் தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு. வஞ்சகமான எண்ணமுடன் தவமும் அறமும் புரிபவர்கள் இம்மையிற் பழியையும், மறுமையில் நரகையும் அடைவார்கள். "தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு சலமொழுகல்’ என்பது பழமொழி. - 214 215. தம்மை உடையவராதல் -

எண்ண எண்ணக் குறைவுபடாத பெருஞ்செல்வம் உடையவராதல்; சிறந்த குடிப்பிறப்பினரா யிருத்தல்; மன்னர் களையும் தமக்கு வேண்டியவராகப் பெற்றிருக்கும் செல்வாக்கு; மன்னரால் இவர் இன்னவர் என்று கூறிப் போற்றப்படும் புகழ்: என்றெல்லாம் சொல்லவேண்டாம். இம்மைப் புகழுக்கும் உம்மையின் நற்கதிக்கும் அவை யெல்லாம் முதன்மையானவை அன்று. தம்மைத் தாமாக உடைய புலனடக்கம் இருக்கிறதே, அதுதான் மிகமுதன்மையானதாகும்

எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் மன்னர் உடைய உடைமையும்--மன்னரால் இன்னர் எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை.

邀 தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்க நெறியே இம்மை மறுமைகளுக்கு நற்பயனாவது என்பது கருத்து. இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை’ என்பது பழமொழி.215 216. கொலையர்க்கு இன்பம் இல்லை

உடலின் நன்மை கருதுபவர் தயிரைத் தயிராகவே கொள்ள லாம். ஆனால், அதனைக் கருதாதவர், சுவை யொன்றையே பெரிதாகக் கருதித் தயிரின் தன்மையை அழித்து மற்றொரு உணவுப்பொருளாக அதனை மட்டும் உண்பார்கள். அது போலவே, உள்ளத்திலே அறியாமை நிறைந்து மயக்குவதனாலே கொலை புரிந்து, மறுமை இன்பத்தை