பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் விளக்கம் பெறும் என்பார்கள் சான்றோர்கள். -

உலக வாழ்விலே, ஒழுக்கத்தைப் பேணியும், உள்ளத்தைத் தெளிவாக்கியும், உயர்ந்த நெறிகளில் நின்றும் வாழ்வதுதான் சிறப்பாகும். இப்படிவாழ்பவர்களே, -

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். - என்னும் வாக்கின்படித் தெய்வ நிலைக்கு உயர்கின்றனர்; பிறரோவிலங்குநிலைக்குத் தாழ்ந்து விடுகின்றனர்.

மனிதப் பிறவி பெற்றவர்கள் தெய்வ நிலைக்கு உயர்வதே செய்யத் தக்கது. அதற்கு இயலாவிட்டாலும், மனித

நிலையிலாவது வழுவாமல் வாழவேண்டும். இவ்வாறு வாழும் -

வகையறிந்து வாழ்வதற்கு இந்நூல் வழிகாட்டிஉதவும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. - -

இந்தத் தெளிவுரை அம்ைப்பைச் செய்வதற்கு எனக்கு உதவியாக விளங்கிய, இந்நூலின் முதற்பதிப்புப் பேராசிரியர்கட்கு எல்லாம் நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

தமிழினத்தின் வாழ்க்கை மரபுகளில் புதிய பல - சிந்தனைகளை ஊன்றி வளர்ப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல புதிய படைப்புக்களை வழங்குவதிலும், ஒரு சிறந்த இடத்தைப் பெற்று விளங்குபவர்கள் தமிழகச் சமண முனிவர்கள் ஆவர். அவர்கட்கும், அவர்கள்ன வழி நின்று இந்நூலை உருவாக்கிய முன்றுறை அரையர்க்கும் தமிழுலகம் நன்றிசெலுத்தும் கடப்பாடு உடையதாகும். - -

இந்நூலினை அனைவரும் விரும்பி வரவேற்றுக் கற்று மகிழ்ந்து, வாழ்வில் வளம்பெருக்கி இன்புறுவதற்கு முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க் தமிழார்வம்!

ുകേട്