பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நீறுர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் è வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப் தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர். தாற்றுதல் புட்ைத்தாற்றிக் கழித்தல், நீறுபடிந்த மாணிக்கம் தன் ஒளி குறைவதில்லை. அதுபோலச் சான்றோர், சிறியவர் கூட்டத்தில் கலந்திருந்தாலும் தம் சான்றாண்மை குறையார் என்பது கருத்து. 'தாறப் படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர் என்பது பழமொழி. 226 227. பொறுமை புகழ் தரும்!

வானளாவ உயர்ந்து விளங்கும் பெரிய மூங்கில்களையு டைய மலைநாடனே தம்முடன் கோபங்கொண்டவர்களாக, தமக்கு மிகவும் கொடுமையான செயல்களைச் செய்தவரையும் பொறுத்து, அவர்க்கும் நன்மையே செய்து ஒழுகுதலே புகழ் தருவதாகும். தாமும் பதிலுக்குக் கோபித்துத் தீமை செய்வதால் பயனில்லை. தாம் பொறுத்துக் கொள்ளுதலினாலே வருவது தான் சால்பு என்னும் சிறந்த பண்பாகும்.

கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்--ஒறுத்தாற்றின், வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே தானோன் றிடவரும் சால்பு.

கொடுமையைப் பொறுப்பதே சால்பு; அது புகழ் தரும் என்பது கருத்து. 'தான் தோன்றிடவரும் சால்பு’ என்பது பழ மொழி. ! 227 228. பெரியோரைப் பழிக்கும் சிறியோர் - -

சிறியவர்கள் பெரியவர்களை அவர்களுடைய ஒழுக்கத் தாலும் உணர்ந்து கொள்ளாமல், தம்மிடத்தே ஒரு தகுதி என்பதும் இல்லாமல், இவர்களும் எளியவரானவரே என்று தங்களுக்குச் சமானமாகக் கொண்டு, தகுதி அல்லாத சொற்க ளைக் கூறுதல் அறியாமைச் செருக்கின் பாற்பட்டதாகும்.அது, திங்களை நாய் குரைத்து நிற்பது போன்றதே!

நெறியால் உணராது நீர்மையும் இன்றிச் சிறியார், எளியரால் என்று--பெரியாரைத் தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல், திங்களை நாய்குரைத் தற்று.