பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பழமொழி நானூறு மூலமும் உரையும்



231. நீண்டநாள் தொடர்பு

கரையோடு அலையெறிந்துபொருதும் கடலினையுடைய குளிர்ந்த நாட்டிற்கு உரியவனே அழகிய தாமரைமேல் வாழ்பவ ளான திருமகளோடாயினுங்கூட நெடுநாள் கூடி இருப்பது துன்பமேயாகும். அதனால், தாயின் கருவினிடத்தே முதற் கொண்டு சேர்ந்திருந்தவரான சகோதரர்களேயானாலும், அவர்களும் தமக்குள் ஒரிடத்திலேயே நெடுநாள் கூடி வாழ்தலானது துன்பமாகவே முடியும். - -

கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள் ஒருவழி நீடும் உறைதலோ துன்பம், பொருகடல் தண்சேர்ப்ப பூந்தாமரைமேல் திருவோடும் இன்னாது துச்சு. மிகவும் நெருங்கி நெடுநாள் இருந்தால் மனவேறுபாடு மிகுதல் கூடும்; அதனால், கொஞ்சம் தள்ளியிருந்தே உறவாடியி ருப்பது நல்லதென்பது கருத்து.'திருவோடும் இன்னாதுதுச்சு’ என்பது பழமொழி.துச்சு-நெடுநாள் கூடிவாழ்தல். 231 232. வலியப் பகையை வெல்லுதல் -

அலையைப் பொங்காது அடக்கியபின் கடலிலே நீராடுவோம் என்று காத்திருப்பவர் எவருமே இலர்; அது போலவே, புகழுடைய மன்னரிடத்தே பணி செய்பவராகப் புகுந்து, அவ்விடத்து அவையினுள், பகைவரை வெல்வோம்' எனத் தம் தகுதி தோன்ற உரைத்தார் ஒருவர்; பின்னர், 'மலைபோலும் வேழங்களையுடைய வலிமையானதாயுள்ளதே பகை' என்று கருதியும் அதற்கு அஞ்சாமல் போர் முனைக்குப் போகாதேயே, யாதாயினும் ஒன்றைச் செய்தாயினும் அதனை வெற்றிபெறவேதுணிதல் வேண்டும். . .

வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா உரையுடை மன்னருள் புக்க்ாங்கு அவையுள் நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக திரையவித்து ஆடார் கடல், பகைவர் வலியடங்கியபின் வெல்வோமென்று இராது தந்திரத் தால் அவரை வெல்லும் வகையினை நாடுதலாவது செய்க என்பது கருத்து. திரையவித்து ஆடார் கடல் என்பது பழமொழி. 232 233. பெரியாரும் சிறியாரும் -

கொக்கினம் இரையுண்டு ஆரவாரிக்கும்நீர்வளம் உடைய வயல்கள் செறிந்த ஊரனே "தகுதியுடையவர்களோடு ஒன்று