பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

113



பட்டிருந்து, அவருக்கு வேண்டியவராக நடந்து வந்தவர்;

அதனால் இவரும் தகுதியால் மிக்கவரேயாவர்” என்று, சிறுமை

யாளர்களை எவரும் தெளிந்து உறவாட மாட்டார்கள் சர்க்கரை சோந்திருந்ததானாலும் மணலை எவராது தின்னலாமோ?

தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார் மிக்காரா லென்று சிறியாரைத் தாம்தேறார் கொக்கார் வளவயலூர! தின்லாமோ அக்காரம் சேர்ந்த மணல். - - 'பெரியோர் தொடர்புடையவராயினும், சிறியோர் சிறுமை உடையவராகவே இருப்பவராதலால் அவர் உறவைக் கொள்வது கூடாது' என்பது கருத்து.'தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்’ என்பது பழமொழி. 233 234. பழிக்கும் குணம் - -

பசுக்கூட்டங்களுக்கு மிகுந்த துன்பம் வந்த காலத்திலே, கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் காத்தவன் திருமாலாகிய கண்ணன்.அதனால், அவனையும் மாடுகளுக்குத் தக்க இடையனாவான் என்று உலகத்தார் சொல்லுவார்கள். ஆகவே, தேவர்களுக்கு உரைக்கும் வார்த்தை மக்களுக்கு உரைக்கும் வார்த்தை என்று எதனையும் சொல்ல வேண்டாம்; ஒருவரைத்தீங்காகப்பேசுகின்றநாவிற்குச்சொல்முட்டுப்பாடே கிடையாது. - - - ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும் கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்; தேவர்க்கு மக்கட்கு எனல்வேண்டா, தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல். அது தேவராயினும் மனிதராயினும் வரைதுறையின்றிப் பழிக்கும்; ஆவைக் காத்தற் கடவுளான மாலையே மாடு மேய்க்கும் இடையன் என்றது.பிறரை விட்டுவிடுமோ என்பது கருத்து. ‘தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்’ என்பது பழமொழி.நல்குரவு-வறுமை. - 234 235. பெரியாரைச் சார்ந்தவரிடம் -

மலைநாட்டவர்செய்யும்வெறியாட்டுக்களின் ஆரவாரங் களைக் கேட்டு, ஓநாயினங்கள் அஞ்சி ஒதுங்கும் வெற்புக்கு உரியவனே! தம்முடைய பேதைமையே பற்றுக் கோடாகப் பெரியாரைச் சார்ந்திருப்பவர்கள் மேலாகச், சிறியவர்கள்