பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

117



தொடங்கினார் இல்லத்த தன்பின் துறவா உடம்பினான் என்ன பயன்? - இளமையில் துறவே சிறந்தது.அது இயலாது போயினும், இல்வாழ்விலே எல்லாம் அநுபவித்தபின்பாவது துறவு பூண்க என்று கூறுவது இது. துறவா உடம்பினான் என்ன பயன்’ என்பது பழமொழி. 241 242 உறவும் உதவியும் - -

நீர்வளத்தினையுடைய ஊரனே! ஒரே குடியிலே தோன்றி யவர்கள் முன்பு ஒரு காரணத்தினாலே இன்னாதவராகிப் பிரிந்து இருந்தனர் என்றாலும்,குடும்பத்தையே முழுக்கக் கவிந்து கொள்ளும்தன்மையுடைய பெருந்துன்பமானது வந்தால்,அதன் பின்னரும் இன்னாதவராகிப்பிரிந்து இருக்கவே மாட்டார்கள். ஆனால், ம்ற்றையவரோ பொன்னாகப் போற்றி உறவுகொண் டாடிய காலத்தினுங்கூடத் துன்பத்திலே வந்து உதவமாட்டார் கள்,அவர்கள்.அவ்வளவு நெருக்கமுடையவர் அல்லர் ஆதலினால், முன்னின்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால் பின்னின்னார் ஆகிப்பிரியார் ஒருகுடியார் பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர! துன்னினார் அல்லார் பிறர். ‘தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதுபோல ஒரே குடியிலே பிறந்தவர் தவறாமல் ஆபத்துக்காலத்திலே ஒன்று சேர்வார்கள் என்பது கருத்து. துன்னின்னார் அல்லார் பிறர்’ என்பது பழமொழி. பிறர் அவ்வாறு ஒன்று சேரார் என்பது கருத்து. - - 242 243. ஊசியும் நூலும் - --" - இனிய ஒலியுடைய வெற்புக்கு உரியவனே தைக்கும் ஊசி போகும் வழியே தான் நூலிழையும் போகும்; அதுபோலத் தன்னை ஒருவர் மதித்துத் தம்மவர் என்று உறவு கொண்ட காலத்திலே, என்னவோர் ஆபத்தானாலும், அவ்ர் செய்வதைத் தானும் செய்வதே முறையாகும். அதனால், வரும் இடர்கள் என்னவோ? - -

தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினும் அவர்செய்வ செய்வதே; இன்னொலி வெற்ப! இடரென்ன? துன்னுசி போம்வழி போகும் இழை.