பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பழமொழி நானூறு மூலமும் உரையும்



உறவாடிப்பழகியவரின் துன்பத்தில்தாமும் உடன் இருந்து உதவவேண்டும் என்பது கருத்து,"துன்னுசிபோம்வழி போகும் இழை என்பது பழமொழி. 243 244 அடங்காத சினம் உடையவன்! -

காற்றினாலே, அலைகள் கரையின் மீதும் ஏறி உலாவு கின்ற, மிக்க நீர்வளமுடைய கடற்கரைக்கு உரியவனே ஆறாத சினத்தை உடையவனாக விளங்கும் ஒருவனை அறிவில்லாதவன் என்றே ஒதுக்குக. அவனை விட்டு விலகி நடப்பதே சிறப்பு என்பார்கள். மனத்திலே தெளிவற்ற ஒருவனைத் தெளிவுடை யவனாகக் கொண்டு பழகுதல் மிகவும் அரிதாகும்.

ஆறாச் சினத்தன் அறிவிலன்; மற்றவனை மாறி யொழுகல் தலையென்ப--ஏறி வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப தெளியானைத் தேறல் அரிது.

அடங்காத சினம் உடையவனிடத்தேயும் அறிவற்றானிடத் தேயும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டா மென்பது கருத்து. தெளியானைத் தேறல் அரிது’ என்பது பழமொழி. 244 245. தீயவர் நட்பின் கேடு

யாழினின்று எழும் இன்னிசைபோன்ற இனிதான பேச்சி னையுடைய, மழலைச்சொற்களை உடையவளே! முறைப்படத் தமக்கு உறவாய் அமைந்தவர்களின் தொடர்பைக் கைவிட்டு விட்டு, ஒன்றுக்கும் உதவாத கீழ்மக்களின் தொடர்பைப் பெருக்கிக் கொள்ளுதல் கேடுதருவதாகும். இருக்கும் இனிமை நிரம்பிய பலாமரத்தினை வெட்டிவிட்டு எட்டி மரத்தை நட்டு வைத்து வளர்ப்பது போன்ற பேதைமையான செயலாகும். ஊழாயினாரைக் களைந்திட்டு உதவாத கீழாயி னாரைப் பெருக்குதல்-யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய்! தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல்.

உறவினரை விட்டுவிட்டு அயலாருள் கீழ்மக்களானோ ருடன் கொள்ளும் உறவின் தீமை கூறப்பட்டது.அவரால் கேடே விளையும் என்பதும், அவர் உறவு வெறுக்கத்தக்கது என்பதும் கருத்து. தேனார் ப்லாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல்' என்பது பழமொழி. இருக்கிற பலாவை வெட்டி விட்டுக்