பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

121



பொருள் உதவினாலும் உதவாவிட்டாலும், பசியென்று வந்தவனுடன் பகுத்து உண்ணுதலை மட்டும் தவறாது செய்ய வேண்டுமென்பது கருத்து. நசைகொன்றான் செல்லுலகம் இல்’ என்பது பழமொழி.நசை-பசி தீரும் என்னும் ஆர்வம் 249 250. பாவிகள் ஒழிக! -

பழிபாவங்களின் பயன்களை ஆராய்ந்து எவரிடத்தும் கண்ணோட்டம் உடையவராக விளங்காதவராகவும், எத்தகைய தீய செயல்களையும் செய்வதற்கு அஞ்சாதவர்களாகவும், தம்மைச் சேர்ந்தவர்களையெல்லாம் சிறுமையாகப் பேசுபவர் . களாகவும், மிகவும் நெருங்கிய உறவினர்கட்கும் அவர் வெறுப் பவைகளையே எப்போதும் செய்பவர்களாகவும் வாழ்கின்ற பாவிகளுக்குநஞ்சுகூடஇல்லாமற்போயிற்றோ?

தேர்ந்துகண்ணோடாது தீவினையும் அஞ்சலராய்ச் சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத்-தீர்ந்த விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட்கு இல்லையோ நஞ்சு? அத்தகைய தீயவர் இருப்பதைவிட இறப்பதே நல்லது என்பது கருத்து. நரகர்கட்கு இல்லையோ நஞ்சு என்பது பழமொழி. - - - 250 251. பேச்சினால் அடங்கார்! -

பல்லியின் முட்டைகளைத் தெரித்துப் போட்டதுபோல உயர்ந்த பெரிய புன்னைமரத்தின் பொறி நிறத்தையுடைய பூக்களின் இதழ்கள் வீழ்ந்து கிடக்கும்.பொங்கும்நீரினையுடைய கடற்கரைக்கு உரியவனே! நம்மை அவமதித்துப் பேசுபவர் களைச் செயலாலேயே அடக்க வேண்டும். வாயால், அவர்க்கு மேலாகப் பேசும் கடுஞ்சொற்களால் மட்டும் பயனில்லை.நரியின் ஊளைச் சத்தம் கடல் ஒலியைத் தாழ்விக்காதது போல, நாம் அடர்த்துச் சொல்லும் சொற்களும் அவர்கள் பாற் செல்லுபடியாகாதுதான் போகும். -

உரைத்தாரை மீதுரா மீக் கூற்றம்; பல்லி நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப் பொறிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப! நரிக்கூக் கடற்கெய்தா வாறு. - தீயவகையில் பேசுபவர்களை அடக்கி ஒடுக்குவதன் இன்றியமையாமை சொல்லப்பட்டது. நரிக்கூக் கடற்கெய்தா வாறு’ என்பது பழமொழி. * - 251