பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பழமொழி நானூறு மூலமும் உரையும்



252. தீமையே செய்வார்

வறுமை அடைந்தவர்களானால் தீய செயல்களையே செய்து வாழ்வார்கள். வறுமை இல்லாது செல்வம் உடையவ ரான காலத்தும், மறுமைக்குச் செல்லும் நன்னெறியை அறியாத வர்களாக, அப்படிப்பட்ட நற்செயல்களைக் கெடுத்தே நடந்து வருவார்க்ள்.கல்விஅறிவு இல்லாத கயமைக்குணம் உடையவர் களின் இந்த இயல்பினைப் போலவே, நரிக்கும், உணவு கிடைத்தற்கு நல்ல காலம் என்பதும் கெட்ட காலம் என்பதும் என்றும் கிடையாதாகும்.

அல்லவை செய்வ அலப்பின் அலவாக்கால் செல்வது அறிகலராய்ச்சிதைத் தெழுப; கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்.

எக்காலத்தும் பிணம் முதலியவற்றைத் தின்று வாழ்வது நரி, அதற்கு நல்லகாலம் கெட்டகாலம் என்று யாது இருக்க முடியும்? அதுபோலவே கீழான கயவரும் எப்போதும் கீழ்மை யிலேயே நடப்பவராதலால், அவர்க்கு வறுமையும் வளமையும் ஒன்று தான் என்பது கருத்து. நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்’ என்பது பழமொழி.இழிந்த செயல்களையே நாடுபவர் எப்போதும் கவலையற்றவராகத்திரிவர் என்பதாம்.252 253. வெந்நீரும் சான்றோரும்!

விறகின் இயல்புகளை எல்லாம் விசாரித்து, மிகவும் நல்ல விறகினையே கொண்டுவந்து காய்ச்சினாலும், மிகவும் கொதித்த அந்த வெந்நீர் வீட்டைச் சுட்டுப் பொசுக்குவதில்லை. அதுபோலவே, மிகவும் சிறுமையான பண்புடையவர்கள் தமக்கு அளவற்ற துன்பத்தையே செய்து உள்ளம் கொதிக்குமாறு செய்தாலும், குடிப்பிறப்பினாலே மாண்பு உடைய வர்கள், அவர்கள்மேற் கோபங்கொண்டு அவர்களை வருத்தமாட்டார்கள். இறப்பச் சிறியவர் இன்னா செயினும் பிறப்பினால் மாண்டார் வெகுளார்.--திறத்துள்ளி நல்ல விறகின் அடினும், நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு. வெந்நீரால் வீடு வேகாது', 'கீழோர் கொடுமையால் பெரியோர் சினங் கொள்ளார்’ என்பது கருத்து. நல்ல விறகின் அடினும், நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு’ என்பது பழமொழி. 253