பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

123



254. நல்லறம் நன்மை தரும் மேகலையைச் சுமப்பதனாலே இற்று விடுவது போல مBA விளங்கும் நுண்மையான இடையினை உடையவளே! தான் செய்த நல்ல தருமங்கள் ஒருவனுக்குச் செய்யும் நன்மையைத் தன்னுடைய சுற்றத்தாருங்கூடச்செய்யமாட்டார்கள்.அதனால், அறம் செய்வதைப் பல நாளும் தொடர்ந்து செய்ய முடியாதவரே யானாலும், சில நாட்களாயினும் சிறந்த வழிகளாலே ஒவ்வொரு வரும் செய்வார்களாக

பலநாளும் ஆற்றார் எனினும், அறத்தைச் சிலநாள் சிறந்தவற்றாற் செய்--கலைதாங்கி நைவது போலும் நுசுப்பினாய்! நல்லறம் செய்வது செய்யாது கேள். -

- தருமத்தை நெடுகத் தொடர்ந்து செய்ய முடியாமற் போனாலும், முடிந்த வரையினும் சிலகாலமாவது செய்க, அது அந்த அளவுக்கு நன்மை தரும் என்பது கருத்து. 'நல்லறம் செய்வது செய்யாது கேள்’ என்பது பழமொழி.'கலை என்றது மேகலையை - 254 255. பொருளைப் பாதுகாத்தல்

வானவர்கள், அந்தக் காலத்திலே அமுதத்தை மிகவும் விழிப்போடுதான் பாதுகாத்தார்கள், என்றாலும், தன் தாயான விநதையை சிறைமீட்பதற்காக அது கருடனால் எடுத்துச் செல்லப்பட்டது.ஆகவே, நல்ல காவலைவிட ஒரு பொருளைப் பாதுகாப்பதற்குக் கொடிய அரணே நன்மையானதாகும்.பாது காப்பற்ற பொருந்தா இடத்திலே ஒர் அருமையான பொருளை வைக்கவே கூடாது. வைத்தால் கண்ணிமையாது காவல் செய் தாலும் அதனால் பயனில்லை; அப்பொருள்கள்.வரால் திருடப் பட்டுவிடுதலும் நேரலாம்.

அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால் இமையாது காப்பினும் ஆகாது--இமையோரும் அக்காலத்து ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால் நற்காப்பின் தீச்சிறையே நன்று. - பொருளைக் கடுமையான அரணிடை வைத்துக் காக்கும் காவல் முறைமை கூறப்பட்டது. நற்காப்பின் தீச்சிறையே நன்று' என்பது பழமொழி. - 255