பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பார்த்தோடிச் சென்று கதம்பட்டு நாய்கல்வின் பேர்த்துநாய் கவ்வினார் இல். - தமக்குத் தீமைசெய்த அறிவிலிகளின் செயலைப்பொறுப்

பதே சான்றோர்களின் கொள்கையாகும் என்பது கருத்து; அவருக்கு மீண்டும் தீமை செய்ய நினையாதிருப்பதும் அவர் பண்பாகும் என்பதும் கூறப் பெற்றது. ‘நாய் கவ்வின் பேர்த்து நாய் கவ்வினார் இல் என்பது பழமொழி. 259 260. கருமியின் செல்வம்

முழக்கமிட்டு வீழும் அருவிகளும், மூங்கில்கள் முற்ற அவற்றினின்றும் உதிரும் முத்துக்களும் ஆகிய வளமுடைய மலைநாடனே தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்க்கு வழங்கித் தருமஞ் செய்தலும், தான் அநுபவித்து வாழ்தலும் என்ற பயனுள்ள செயல்களைச் செய்யும் தெளிவற்றவன் பெற்றுள்ள முழங்கும் முரசுகளை உடைய அரசரோடு ஒத்த செல்வமானது, நாய் பெற்ற முழுத் தேங்காயோடு ஒப்புடையுடையதேயாகும்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கும் முரசுடைச் செல்வம்--தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்.

நாய்க்குக் கிடைத்த முழுத்தேங்காயை அதனாலும் தின்ன முடியாது; பிறர் எடுத்துச்சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே கருமியின் செல்வமும் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும் என்பது கருத்து.'நாய் பெற்ற தெங்கம்பழம் என்பது பழமொழி. தெங்கம் பழம் - தென்னை நெற்று முற்றிய தேங்காய். - 260 261. சிறியோர் தகுதியுடையவர் ஆகார்

புள்ளிகளையுடைய வண்டினம், பூக்களின் மேலே மொய்த்துக்கொண்டு இசைபாடிக்கொண்டிருக்கின்ற ஊரனே! பெரியாருக்குச் செய்கின்ற சிறப்பினை, அப்படியே சிறியவர் களுக்கும் விருப்பமுடன் செய்து விடுதலானது மிகவும் முறை யற்றதாகும்.அதுகுதிரையின் மேலே இடுவதற்குரிய சேணத்தை, நாயின்மேலும் இடுவதுபோன்ற பயனற்றதும் அறிவற்றதுமான செயலுமாகும். - -

பெரியார் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல்,--பொறிவண்டு