பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்சிறப்புப்பாயிரம் - அசோக மரத்தின் நிழலிலே அமர்ந்து, அந்நாளிலே அறம் உரைத்த பெருமான் அருகதேவன். அவன் திருவடிகளைப் பணிந்து, தொன்மையான பழமொழிகளுள் நானூறு மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு அடிகளையும் இனிமையாகச் செய்து முன்றுறை அரையன், உலகிற்கு உபகாரமாக இந்த நூலை அமைத்தனன். இனிய பொருள் துறைகள் செறிந்த வெண்பாக்கள் இவை நானூறும் ஆகும்.

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானுறும்--கொண்டினிதா முன்றுறை மன்னவன், நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா இவை.

(பிண்டி-அசோகு, பண்டைப் பழமொழி தொன்றுபடு பழமொழி எனச் சான்றோரால் சொல்லப்படுவது நூலாசிரி யரே இதனைப்பாடினார்; அதனால்,இதுதற்சிறப்புப்பாயிரம் ஆயிற்று.இவற்றை அனைவரும்"கற்றுமணங் கொண்டு சிறந்து விளங்குக" என்பது ஆசிரியர் குறிப்பாகக் கூறுவது ஆகும்.

அருகதேவன் வணக்கம் 1. அருகன் அடிபோற்றுவோம்!

அவித்துஅடக்குவதற்குஅருமையானவை.ஆசைகள்.அந்த ஆசைகளை அவித்து, மெய்ஞ்ஞானத்தைக் குற்றமற உணர்ந்தவன். அருகதேவன். பரந்தகடல் சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய இப் பெரிய உலகத்திலே அவன் திருவடி களைத் தமக்கு உரிமையாகும் படியாகத் தம் உள்ளத்திலே தெளிந்து உணர்ந்தவர்கள் எவரோ, அவர்களே பெரியவர்கள். பெரிய செயல் செய்த உடம்பினுள் இருக்கும் உயிரும் பெருமை