பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

127



பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ நாய்மேல் தவிசிடு மாறு.

சிறுமதியாளரைக் கெளரவித்தாலும், அவர் அந்தக்

கெளரவத்திற்குத் தகுதி உடையவராக விளங்குவதில்லை.அவர் சிறுமைக் குணமே அவரிடம் மிகுந்திருக்கும் என்பது கருத்து. ‘நாய் மேல் தவிசு இடுமாறு’ என்பது பழமொழி. அதனால் பயனில்லை என்பதும் சொல்லப்பெற்றது. 261

262. கோணல் புத்தி உடையவன்

நமக்கு வருத்தம் உண்டாகுமாறு, சிரமப்பட்டு முயன்று

வன்மையாகக் கட்டிவைத்த போதும், நாயின் வால் தன் கோணலிலிருந்து திருந்தி நேராதல் என்பது என்றுமே இல்லை யாகும். அதுபோலவே, தம்பால் நிறையுடைமை என்னும் பண்பினாலே மேன்மையுடையவராயிராத பெண்களைச், சிறை யிட்டுக் காவல் காத்து வருவதனால் வசப்படுத்தி விடலாம் என்பதும், ஒருபோதும் நடக்கமுடியாததே.

நிறையான்மிகுகல்லா நேரிழையாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா--அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும், நாய்வால் திருந்துதல் என்றுமோ இல். நாய் வாலை நிமிர்த்த முடியாதது போலவே, பண்பற்ற பெண்களைச் சிறையிட்டுக் காத்தாலும் திருத்தவும் முடியாது என்பது கருத்து. ‘நாய்வால் திருத்துதல் என்றுமோ இல்’ என்பது பழமொழி. - - 262 263. குறிப்பறியும் மனைவி -

தாம் சொல்லாமலே,தம்முகத்தை நோக்கித்தம்முடைய உள்ளக் குறிப்பினை அறிந்து, வேண்டியன செய்யும் பண்பினை

உடையதம்முடைய மனையாளே,தம் வீடுதேடிவந்த விருந்தின ருக்கு உணவளித்துப் பேணச், செல்வ நிலையிலே யாதொரு

குறைபாடும் இல்லாமல், அரண் பெற்றவராக வாழ்ந்து வருபவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். நாள்தோறும் இறைத்துக் கொள்வதற்குக் கடலினிடத்தே ஏற்றமிட்டவர்கள் போன்றவர் அவர்களே யாவர்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச்--செல்வத்து இடரின்றி ஏமாந் திருந்தாரே, நாளும் கடலுள் துலாம்பண்ணி னார்.