பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பழமொழி நானூறு மூலமும் உரையும்



'குறை குடம் கூத்தாடுவதுபோலக் குறைமதியினரும் தற்பெருமை பேசித்தருக்கித்திரிவார்கள் என்பது கருத்து.'நிறை குடம் நீர் தளும்பல் இல் என்பது பழமொழி. குறை குடம் கூத்தாடும் என்பதையும் நினைக்க 267 268. கொண்டும் கொடுத்தும் வாழ்தல் *

'இருப்பது ஒன்றுதானே என்றும்; சிறிதளவுதானே' என்றும்; நமக்கு உதவுவதான ஒன்று எதுவும் இல்லையே’ என்றும் ஒருவன் சொல்லிக்கொண்டேமுயற்சி எதுவும் செய்யா தவனாகிச் சோம்பலாக இருந்தால், அதனால் அவனுக்குவரும் தாழ்ச்சியே பெரிதாயிருக்கும், தம்மிடத்திலே நிலைபெற்றிருந்த பொருளில் செலவானதை மீளவும் முயன்று தேடும் முயற்சியில் லாதவர்கள், அன்றைப் பகல் முழுவதும் கூட வளமுடன் வாழ LDITL LITTT56II. -

ஒன்றால் சிறிதால் உதவுவதொன்று இல்லையால் என்றாங்கு இருப்பின் இழுக்கம் பெரிதாகும் அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது சென்றது பேராதவர்.

'இருப்பதைக் கொண்டு முயற்சியுடன் பாடுபட்டுப் பொருளை ஈட்டியும் செலவழித்தும் வாழ்வதே சிறந்த வாழ்வு' என்பது கருத்து. ‘நின்றது சென்றது பேராதவர்” என்பது பழமொழி. - 268 269. தாமே தம்மை அறிவர்

அப்பனே! நின்னுடைய நடத்தையின் இயல்பினைநின்னை யல்லாமல் முற்றவும் அறியக்கூடியவர்கள் எவருமே இல்லை. அதனால் தம்முடைய ஒழுக்கத்தைக் கருதாதவர்கள் தம் சுற்றத் தார் ஒழுகிவந்ததன்மையையும் அறியாதவர்கள் செவ்விய ஒழுக் கத்திலே சேர்ந்திராத சிறியவர்கள் ஆகியவர் களைப்போல நீ நடத்தலாகாது. நின்னுடைய நல்லொழுக்க நடையிலேயே தளராது நீ எப்போதும் நடந்து வருவாயாக

தந்நடை நோக்கார், தமர்வந்த வாறறியார் செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது, நின்னடையானே நடஅத்தா நின்னடை நின்னின்றறிகிற்பார் இல். சிறியவர்களின் தவறான நடத்தைகளைத் தமக்கு உதாரண மாகக் கொள்ளாமல் பெரியோர் நடக்கின்ற செந்நெறிப்படியே